ஜெ. மரணம்: அப்பல்லோ அடுத்து அள்ளிவிடப் போகும் கட்டுக் கதை இதுதான்!
ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்களுக்கு மீண்டும் விளக்கம் என்ற பெயரில் கட்டுக் கதைகளை அளந்துவிட தயாராகி வருகிறதாம் அப்பல்லோ மருத்துவமனை
சென்னை: ஜெயலலிதாவின் மரணத்தை முன்வைத்து அப்பல்லோ மருத்துவமனையை சுற்றி ஆயிரமாயிரம் கேள்விகள் எழுந்துள்ளது. இந்த கேள்விகளுக்கு பதில் தருவதாக நினைத்துக் கொண்டு அடுத்த கட்டுக் கதைகளை அவிழ்த்துவிட அப்பல்லோ நிர்வாகம் தயாராகி வருகிறதாம்.
ஜெயலலிதா மருத்துவமனையில் செப்டம்பர் 22-ந் தேதி அனுமதிக்கப்பட்ட நாள் முதலே அப்பல்லோ மருத்துவமனை மர்ம மாளிகையாகிவிட்டது. அப்பல்லோவில் என்னதான் நடக்கிறது என்பதை நாடும் நாட்டும் மக்களும் அறிய முடியாத நிலையே இருந்து வந்தது.
அப்பல்லோவில் ஜெயலலிதா மறைந்த நிலையில் மர்மங்கள் துளியும் விலகிவிடவில்லை. தற்போது ஜெயலலிதா மறைவுக்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விஸ்வரூபமெடுத்துள்ளது.

அனைத்தும் முரண்
இதனிடையே அவ்வப்போது அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைகள், மருத்துவர்களின் பேட்டிகள், கடைசியாக வெளியிட்ட அறிக்கை என அனைத்துமே முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கிறது. இது அப்பல்லோ நிர்வாகத்துக்கு சிக்கலைக் கொடுத்துள்ளது.

ஜெ. உணவு விவகாரம்
இதையடுத்து அப்பல்லோ நிர்வாகம் சந்தேகங்களுக்கான பதில்களைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக உள்ளது. முதலில் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட உணவு விவகாரத்தை சமாளிக்க முடிவு செய்துள்ளதாம்.

யார் சோதித்தது?
ஜெயலலிதா, கமாண்டோ பாதுகாப்பு படையில் இருப்பவர்; அவருக்கான வெளி உணவுகள் பரிசோதிக்கப்பட்டு பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்; ஏன் இப்படி செய்யவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இதற்குதான் முதல் பதிலை ரெடி செய்கிறதாம் அப்பல்லோ.

இதுதான் அந்த பதில்
அந்த பதிலில், ஜெயலலிதாவின் தனிப்பட்ட சமையலரையே அப்பல்லோ மருத்துவமனை அழைத்து வந்தது. அவர் இங்கேயே தங்கி இருந்து ஜெயலலிதாவுக்கான உணவுகளை தயாரித்து கொடுத்தார்; அதனால் கமாண்டோ படையினர் அதில் சந்தேகப்படவில்லை. ஆகையால் பதிவேடுகள் எதுவும் தேவையில்லை என ஒரு விளக்கம் தரப்போகிறதாம் என்கின்றன அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications