முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க டிச.31 கடைசி நாள்
சென்னை: முதலமைச்சரின் கணினித் தமிழ் விருதுக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது: ''முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில், 'வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெல்லாம் கணினி வழித் தமிழ்மொழி பரவிட வகைசெய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது' என்ற பெயரில் விருது வழங்கப்படும்' என ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இவ்விருது தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படுகிறது. விருது பெறுபவர்களுக்கு விருதுத் தொகை ரூ.1 லட்சத்துடன் ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.
இதன்படி, 2013 ஆம் ஆண்டிற்கான விருது எதிர்வரும் சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு அன்று (14.4.2014) வழங்கப்படவுள்ளது. போட்டிக்குரிய மென்பொருள்கள் 2010, 2011, 2012-ம் ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது'- 2013ஆம் ஆண்டுக்கான விண்ணப்பம், விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.org) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விருதுக்கான விண்ணப்பத்தை, தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை -600008 என்ற முகவரிக்கு 31.12.2013க்குள் அனுப்ப வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications