For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு.. போன வருஷம் இதே நாளில்.. அல்லோகல்லப்பட்ட தமிழகம்!

ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்த நாள் இன்று.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு.. போன வருஷம் இதே நாளில்.. அல்லோகல்லப்பட்ட தமிழகம்!- வீடியோ

    சென்னை: ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்த நாள் இன்று.

    தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்பல்லோ மருத்துவர்கள் குழு, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, சிங்கப்பூர் மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சிகிச்சையளித்தது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.மேலும் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்துவிட்டார்.

    விரும்பும்போது வீடு திரும்புவார்

    விரும்பும்போது வீடு திரும்புவார்

    விரும்பும்போது ஜெயலலிதா வீடு திரும்புவார் என அப்பல்லோ நிர்வாகத் தலைவர் பிரதாப் ரெட்டி கூறினார். ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் நலமாக உள்ளார் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுவதாக அதிமுக செய்தி தொடர்பாளர்கள் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்தனர்.

    4ஆம் தேதி எய்ம்ஸ் அறிவிப்பு

    4ஆம் தேதி எய்ம்ஸ் அறிவிப்பு

    கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி ஜெயலலிதா முழு குணமடைந்துவிட்டார். அவர் விரைவில் வீடு திரும்புவார் என கூறியது எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு.

    கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டது

    கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டது

    ஆனால் அன்று மாலை 4 மணியளவில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியானது. இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அதன் 12வது அறிக்கையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று 4.12.2016 (ஞாயிற்றுக்கிழமை) மாலை கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டது.

    ரமணா படம் போல் காட்சிளித்தது

    ரமணா படம் போல் காட்சிளித்தது

    அவர உடல் நிலையை இதயவியல், நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பல்லோ மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரமணா படம் போலவே காட்சியளித்தது அப்பல்லோ மருத்துவமனை வளாகம்.

    பரபரப்பான அப்பல்லோ

    பரபரப்பான அப்பல்லோ

    குறிப்பாக அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அனைத்து உயர் போலீஸார்களும் அப்போலோ விரைந்தனர். நீண்ட நாட்களுக்கு பின்னர், டிசம்பர் 4ஆம் தேதி அரசுத்துறை உயர் அதிகாரிகள் அப்போலோ விரைந்ததால், மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

    திரண்ட தொண்டர்கள்

    திரண்ட தொண்டர்கள்

    சென்னையில் உள்ள காவல் நிலையங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மருத்துவமனை முன்பு ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். கண்ணீர் விட்டபடியே அவர்கள் வழிபாடு நடத்தினர்.

    நள்ளிரவில் வந்த ஆளுநர்

    நள்ளிரவில் வந்த ஆளுநர்

    இந்த நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னைக்கு அன்றிரவு 11 மணியளவில் வந்தடைந்தார். விமான நிலையத்திலிருந்து அவர் ஆளுநர் மாளிகைக்கு சென்று விட்டு நள்ளிரவு 12.02 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார்.

    10 நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர்

    10 நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர்

    மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடம் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். சரியாக 10 நிமிடங்கள் கழித்து மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார் அப்போதைய பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ்.

    English summary
    Appolo hospital said on last year on December 4th Evening that Jayalalitha suffered i cardiac arrest. She was monitoring by the team of experts including cardiologists, critical care specialists. Governor also visited the hospital at mid night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X