துரைமுருகன் அண்ணா! கருணாநிதியே உங்கள் கனவில் வருவார்! ஜெகத்ரட்சகன் குறித்து சொல்வார்.. பாமக பாலு
ஆற்காடு: துரைமுருகன் அண்ணா! "ஜெகத்ரட்சகனால் கட்சிக்கு கெட்ட பெயர் என முன்னாள் முதல்வர் கருணாநிதியே உங்கள் கனவில் வந்து சொல்வார் . பாலுவுக்கு உதவி செய்" என்று கூறுவார் என அரக்கோணம் பாமக வேட்பாளர் பாலு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆற்காடு சட்டமன்ற தொகுதிகளில் உப்புப்பேட்டை , சின்னதக்கை, சாம்பசிவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரக்கோணம் பாமக வேட்பாளர் பாலு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உப்பு பேட்டை , சின்னதக்கை , சாம்பசிவபுரம் உள்ளிட்ட 35 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களிடையே மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அப்போது பேசிய வேட்பாளர் பாலு, மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமையவும்,
என்னை வெற்றி பெறச் செய்தால் நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக இருந்து இந்த தொகுதியை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் கொண்டு செல்வேன்.
கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு வேளாண்மை கல்லூரி, மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி கொண்டு வர முயற்சிப்பேன். சாராய ஆலை வைத்திருப்பவரை தோற்கடிக்க மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
மூன்று முறை எம்பியாக இருந்த ஜெகத்ரட்சகன், தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை என கூறி அவரை திமுகவினரே பல இடங்களில் ஊருக்குள் விடவில்லை. தொகுதியை வளர்ச்சி பணிக்கு கொண்டு வர மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
அது போல் நேற்றைய தினம் பாமக வேட்பாளர் பாலு, லாலாபேட்டையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் , அமைச்சர் துரைமுருகன் அண்ணா, இந்த தொகுதி மக்களுக்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை. உங்கள் கட்சியை சேர்ந்த அரக்கோணம் மக்களவை உறுப்பினர் ஜெகரட்சகனை எதுவும் கேள்வி கேட்க முடியவில்லைய
நீங்கள் பொதுப் பணித் துறை அமைச்சராகவும் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி , அண்ணா அருகே இருந்தவர். அப்படிப்பட்ட நீங்கள் உங்களை வெற்றி பெற செய்த மக்களுக்கு என்ன செய்தீர்கள். இந்த ஊர் பிரச்சினைகளை பற்றி பேசலாம். நீங்கள் வாங்க அண்ணா! கருணாநிதியின் உடலை அண்ணா சமாதி அருகே மெரினாவில் அடக்கம் செய்ய உதவி செய்தது.
எனவே இந்த நேரத்தில் நீங்கள் எனக்கு உதவ வேண்டும். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், "காலமான கருணாநிதி உங்கள் கனவில் வந்து, பாலுவுக்கு உதவி செய். ஜெகத்ரட்சகனால் நம் கட்சிக்குத்தான் கெட்ட பெயர்" என்றுதான் சொல்வார். ஜெகத்ரட்சகனால் லாலாப்பேட்டையில் குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி பிரச்சினைகள் எல்லாம் தீரக்கப்படாமலேயே இருக்கிறது. எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் மதுபான கடைகளை மூடுவேன். தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன் என பாமக வேட்பாளர் பாலு தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications