மீண்டும் பிரச்சாரம்: அரவக்குறிச்சி, தஞ்சைக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்
அரவக்குறிச்சி: தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி மற்றும் தஞ்சையில் அரசியல் தலைவர்கள் மீண்டும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று அரவக்குறிச்சியில் பிரச்சாரம் செய்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை ஆகிய தொகுதிகளில் மட்டும் தேர்தல் மே 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அந்த இரண்டு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சையில் 16ம் தேதி மாலை 6 மணி முதல் 21ம் தேதி மாலை வரை பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் அந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமியை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்ய உள்ளார். அரவக்குறிச்சியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி களத்தில் உள்ளார்.
தஞ்சை மற்றும் அரவக்குறிச்சியில் 23ம் தேதி வாக்குப்பதிவு நடத்தி 25ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications