அரவக்குறிச்சி தேர்தல்… கே.சி. பழனிச்சாமி நாளை வேட்புமனு தாக்கல்.. எ.வ. வேலு தகவல்
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
கரூர்: அரவக்குறிச்சியில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என்று எம்எல்ஏ எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட முறையே கே.சி.பழனிச்சாமி, அஞ்சுகம், டாக்டர் சரவணன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று வேட்புமனு தாக்கல் இந்த மூன்று தொகுதிகளிலும் தொடங்கியது. இதனையடுத்து, திமுக சார்பில் அரவக்குறிச்சியில் போட்டியிடும் வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி நாளை வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் என்று கரூரில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்எல்ஏ எ.வ.வேலு கூறியுள்ளார்.
மேலும், வரும் 30ம் தேதி தேர்தல் பணிமனையை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் திறந்து வைப்பார் என்றும் அரவக்குறிச்சித் தொகுதியில் போட்டியிடும் கே.சி. பழனிச்சாமிக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரத்திற்கு மு.க. ஸ்டாலின் வர உள்ளார் என்றும் வேலு தெரிவித்தார்.
முன்னதாக, கே.சி. பழனிச்சாமி போட்டியிடும் தொகுதியில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து, இங்கு நடைபெற வேண்டிய தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications