பேரறிஞர் அண்ணா.. படம் அல்ல ஒரு பாடம்: கி. வீரமணி

பேரறிஞர் அண்ணாவின் 45வது நாளையொட்டி கி. வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
செயற்கரிய செய்த தந்தை பெரியாரின் தலைமகன் அறிஞர் அண்ணாவின் 45ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (3.2.2014). இது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாளே தவிர, வைதீகபுரி அகராதியில் உள்ள ‘திதியோ, சிரார்த்தமோ,திவஷமோ' அல்ல.
நம் சிந்தனைகளைக் கூர் தீட்டிக் கொள்ளும் ஒரு வாய்ப்பு நாள்!
அண்ணா இன்று பலருக்குப் படம் மட்டுமே! உண்மையில் அவர் பாடம் ஆக வேண்டும்.
- பாடமல்ல! இது ஒரு விசித்திர வேடிக்கை, நமக்கு வேதனை!
அண்ணா பெயர் சொன்னால் போதுமா?
அண்ணா என்றால் யார்? எதைச் செய்தவர்?
அண்ணா என்றால் பகுத்தறிவு,
அண்ணா என்றால் சமூகநீதி,
அண்ணா என்றால் அடக்கம், எளிமை, ஆடம்பரமின்மை!
அண்ணா என்றால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
ஆகியவைகளைப் போற்றிப் பின்பற்றிய பண்பாளர்!
இவைகளை மறந்துவிட்டு அண்ணாவைப் புறந்தள்ளி பூஜை செய்வதுபோல சடங்கு நிகழ்வுகளை நடத்துவது அண்ணாவைக் கொச்சைப்படுத்தும் கோணல் நடவடிக்கைகளேயாகும்.
"நான் கண்ட, கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார்'' என்று கூறி இறுதி மூச்சடங்கும் வரை பெரியாரைத் துணைக் கொண்ட பெம்மான்!
எனவே அண்ணாநினைவு நாளில் அவர்தம் லட்சியங்களை நெஞ்சில் ஏந்தி, பீடு நடைபோட உறுதி ஏற்று, அவர் காண விரும்பிய பெரியார் உலகத்தைப் படைப்போம்!
அது - வெறும் தேர்தலை மட்டும் பொறுத்ததல்ல, அடுத்த தலைமுறைகளின் மானவாழ்வைப் பொறுத்த மகத்தான நிலைப்பாடு;
வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!
இவ்வாறு கி. வீரமணி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications