விடாமல் போராடும் அரியலூர் மாணவர்கள்.. கல்லூரியை மூடியும் தொடரும் போராட்டம்!
அரியலூர் அரசு கலைக் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்த பின்னரும் மாணவர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர்: நீட் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என அரியலூர் கலைக்கல்லூரி மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
அரியலூரை அடுத்த குழுமூரில் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு அரியலூர் கலைக்கல்லூரி மாணவர்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நன்றாக படித்து அதிக மதிப்பெண் எடுத்தும் அனிதாவிற்கு மருத்துவ இடம் கிடைக்காததற்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் கலைந்து செல்ல அறிவுறுத்தியும் கேட்காமல் மாணவர்கள் தங்கள் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கும் வரை போராட்டம் ஓயாது என்று திட்டவட்டமாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் கல்லூரிக்கு நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ள போதும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதே போன்று வகுப்புகளை புறக்கணித்து கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த கல்லூரியும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video


நீட் தடை கேட்டு முழக்கம்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்தில் இறங்கியுள்ளனர். திண்டுக்கல்- கரூர் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாசலில் அமர்ந்து அனிதாவின் படத்தை கையில் ஏந்தி நீட் தடை கேட்டு கோஷங்களை எழுப்பினர்.

உள்ளிருப்பு போராட்டம்
சேலம் ஆத்தூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்களும், பழனியில் பழனியாண்டவர் கல்லூரி மாணவர்களும் ஓரணியில் திரண்டு நீட் ஏழை மாணவர்களுக்குத் தேவையில்லை என்ற கோஷங்களுடன் போராடி வருகின்றனர். கரூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பகோணம் கல்லூரி மூடல்
மாணவர்கள் போராட்டத்தால் கும்பகோணம் ஆண்கள் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்ப்டடுள்ளது. கடலூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் இரண்டாவது நாளாக நீட் தடை கேட்டு போராடி வருகின்றனர்.

தூக்குக் கயிற்றுடன் போராட்டம்
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி அருகே மாணவர்கள் தூக்கு கயிற்றுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் குரல்வலையை நெறிக்கிறது நீட் என்பதை குறிக்கும் விதமாக இந்த நூதன போராட்டம் நடத்தப்பட்டது. இதே போன்று திருத்துறைப்பூண்டி அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications