மயிலாடுதுறையில் சர்ப்ரைஸா வந்து நின்ற "விருந்தாளி".. தலைதெறித்தோடிய நபர்.. தூக்கம் தொலைத்த அரியலூர்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கட்டுமான தொழிலாளி சொன்ன அந்த அடையாளத்தை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள்.. இப்போது ஊருக்குள் புகுந்த சிறுத்தையின் காலடி தடத்தையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மயிலாடுதுறையில் கடந்த 2-ந் தேதி, ஒரு சிறுத்தை ஊருக்குள் புகுந்துவிட்டது.. இந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தயாரானார்கள்.. இதற்காக, கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் போன்றவற்றுடன், பல்வேறு குழுக்களை அமைத்து, பல்வேறு வியூகங்களுடன் தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டார்கள்.. 10 நாட்களாக சிறுத்தை சிக்கவேயில்லை..

சிறுத்தை: இப்படிப்பட்ட சூழலில், கடந்த 11-ம் தேதி அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை சுற்றித் திரிந்தது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது. அப்படியானால், மயிலாடுதுறையிலிருந்து, நீர்வழிப்பாதை வழியாக, அரியலூருக்குள் சிறுத்தை நுழைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. அதனால், அரியலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் நடத்தப்பட்டது.
இதற்கு பிறகு, காவிரி, பழைய காவிரி, மஞ்சலாறு நீர்வழி புதர்களில் சிறுத்தை பதுங்கியிருக்கலாம் என்று தகவல் வெளியானது.. அதற்கேற்றவாறு, சிறுத்தையின் எச்சம் அந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது..
ஓவர் வெயில்: இப்போது வெயில் அதிகமாக இருப்பதால், தண்ணீர் குடிப்பதற்காகவும், வெப்பத்தை சமாளிப்பதற்காகவும், நீர்வழி புதர்களில் பதுங்கியிருக்கலாம் என்றார்கள்.. எனவே, அந்த பகுதியிலும் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைக்கப்பட்டன. அப்போதும் சிறுத்தை சிக்கவில்லை.
அதுமட்டுமல்ல, ஆரோக்கியநாதபுரத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் சித்தர்காடு என்ற கிராமத்தில் ஆடு ஒன்று செத்து கிடந்தது.. இந்த ஆட்டை சிறுத்தை கொன்றிருக்கலாம் என்றும் சந்தேகப்பட்டதால், அங்கேயும் கூண்டுகளை அமைத்து தேடும் பணி நடந்தது. அப்போதும் சிறுத்தை சிக்கவில்லை.
பரபரப்பு தகவல்: இப்படிப்பட்ட சூழலில், மயிலாடுதுறை கட்டுமான தொழிலாளி ஒருவர், வனத்துறையினரிடம் பரபரப்பு தகவலை சொல்லி உள்ளார். அதாவது, "ஆட்டை அடித்து கொன்ற சித்தர்காடு காவிரி ஆற்றங்கரை பகுதியில், சிறுத்தை தென்பட்டதாகவும், அது தன்னை விரட்டி வந்த நாய்களில், ஒரு நாயை தூக்கி செல்லும்போது, நாய்கள் சேர்ந்து சிறுத்தையை விரட்டியதாகவும் வனத்துறையினரிடம் அந்த தொழிலாளி அதிர்ச்சி விலகாமல் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு மறுபடியும் வனத்துறையினர் விரைந்து சென்றார்கள்.. அங்கேயிருந்த காலடி தடயங்களை ஆய்வு செய்தார்கள்.. அதில், கொஞ்சம் பெரிதான காலடி தடம் ஒன்றை கண்டுபிடித்துவிட்டார்களாம்..
அடையாம்: அதனைசுற்றி அடையாளம் தெரியவேண்டும் என்பதற்காக, சுண்ணாம்பில் வட்டம் வரைந்து மூடி, பாதுகாப்பாக வைத்திருக்கிறார்களாம். இனிமேல்தான், அது சிறுத்தையின் கால்தடமா? என்று தெரியவரும்..
அப்படியானால், சிறுத்தை இப்போது அரியலூரில் இருந்து மறுபடியும் மயிலாடுதுறைக்கு வந்துவிட்டதா? என்று தெரியவில்லை.. ஆனால், சிறுத்தை வந்ததற்கான எந்த தடயமும் இதுவரை கிடைக்கவில்லை..
தூக்கம் போச்சே: இருந்தாலும் சிறுத்தையை பிடிக்க மீண்டும் மயிலாடுதுறை பகுதியில் 3 கூண்டுகள், 10 கண்காணிப்பு கேமராக்களுடன் வனத்துறையினர் காத்து கொண்டிருக்கிறார்கள்.. எந்த மாவட்டத்தில் சிறுத்தை இருக்கிறது என்று உறுதியாக தெரியாமல், மயிலாடுதுறை + அரியலூர் என 2 மாவட்ட மக்களும் தங்களது தூக்கத்தை தினம் தினம் தொலைத்து கொண்டிருக்கிறார்கள்..!!!
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications