தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்கணும்.. அவை.. பிரஸ் மீட்டில் பட்டியலிட்ட அர்ஜுன் சம்பத்தால் பரபரப்பு
கோவை: தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை சங்கனூர் பகுதியில் நேற்று இந்து மக்கள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த செயற்குழுக் கூட்டம் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டம் முடிந்ததும் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கொங்கு பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நமது தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டும்.
தென் மாவட்டங்களை பிரித்து ஒரு மாநிலம், கொங்கு பகுதியை பிரித்து ஒரு மாநிலம் என உருவாக்கப்பட வேண்டும். இந்து மக்கள் கட்சி இது தொடர்பான முன்னெடுப்புகளை எடுக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மதம் மாறி சென்றவர்களும் இந்து பட்டியலின சமூக மக்களுக்கு உரிய சலுகைகளை அனுபவித்துக் கொள்ள முடியும் என்ற சட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்.

இது சட்டப்பூர்வமாக செல்லாது. இதற்கு அதிகாரம் மத்திய அரசிற்குதான் உள்ளது. இது அம்பேத்கர் கொள்கைகளுக்கு மட்டும் அல்லாமல் அம்பேத்கரின் சட்டங்களுக்கும் விரோதமானது. இதனை நிறைவேற்றினால் கிறிஸ்துவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே இந்த மாதம் மாறி சென்றவர்களுக்கும் சலுகைகளை அளிப்பதை எதிர்த்து சட்ட போராட்டத்தை இந்து மக்கள் கட்சி முன்னெடுக்கும்.
பிரதமரின் வேட்பாளர்கள்தான் தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதிகளும் வெற்றி பெற வேண்டும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக உறுப்பினர்களின் சொத்து பட்டிலை வெளியிட்டுள்ளார். அண்ணாமலை வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு பதில் கொடுக்காமல் திமுகவினர் அண்ணாமலையை சிறுமைப்படுத்தக் கூடிய வகையிலும் கேலி செய்கிற வகையிலும் விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்.
திமுகவினருக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது என்பதற்கு நேரடி பதில் வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில்தானே தண்டனை கிடைத்தது. அண்ணாமலை திமுகவினரின் சொத்து மதிப்பை குறைத்து கூறியுள்ளார் என மக்களே ஆதங்கத்தில் இருக்கிறார்கள். அண்ணாமலைக்கான முழு ஆதரவை இநது மக்கள் கட்சி அளிக்கும்.

அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களை தற்போது திமுகவினர் முடக்கி வைத்துள்ளனர். அவற்றையெல்லாம் மீண்டும் செயல்படுத்திட வேண்டும். கோவை மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை போக்கக் கூடிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தமிழகம் நன்றாக இருக்க வேண்டும் என கம்யூனிஸ்டுகள் எப்போதும் விரும்ப மாட்டார்கள்.
கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டிவிட்டு இங்கிருந்து கனிம வளங்களை அங்கு எடுத்துச் செல்கிறார்கள். இதை தமிழக அரசு தட்டிக் கேட்கவில்லை. சிறுவாணி தண்ணீரை தடுப்பதற்கு கம்யூனிஸ்ட் ஆட்சி மிகப் பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. திமுக அரசியல் காரணத்திற்காக கொங்கு மக்களை பழி வாங்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். குடிநீர் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும். நிறைய நல்ல பல திட்டங்களை எல்லாம் கொங்கு மண்டலத்திற்கு கொண்டு வர வேண்டும். திமுகவினர் இந்து மக்கள் கட்சியின் எந்த ஆர்ப்பாட்டத்திற்கும் அனுமதி வழங்குவதே இல்லை என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். கொங்கு நாடு என பாஜக சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications