அப்போலோ மருத்துவமனையில் பரபர.. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் அதிரடி ஆய்வு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் நேற்று தீவிர ஆய்வு நடத்தி இருக்கிறது.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் நேற்று தீவிர ஆய்வு நடத்தி இருக்கிறது.
ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு சிகிச்சை மேற்கொண்ட அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார்.
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. தமிழக அரசால் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

விசாரணை நடக்கிறது
இந்த நிலையில் இந்த விசாரணை ஆணையம் முன்னாள் தலைமை செயலாளர் உட்பட பலரிடமும் விசாரணை செய்தது. அதன்பின் இந்த விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த விசாரணை ஆணையம் தனது விசாரணையை துரிதபடுத்தி இருக்கிறது. வரிசையாக நிறைய நபர்களிடம் விசாரித்து வருகிறது.

நேற்று அதிரடி
நேற்று அதிரடியாக ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் நேற்று தீவிர ஆய்வு நடத்தி இருக்கிறது. ஆறு பேர் கொண்ட குழு சென்று விசாரணை நடத்தியது. மருத்துவமனை வளாகம் முழுக்க 10 இடங்களில் சோதனை நடத்தி விசாரணை செய்தனர்.

என்ன சிகிச்சை
இதில் அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்று விசாரிக்கப்பட்டது. அதேபோல் அங்கு பணிபுரிந்த மருத்துவர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட எல்லோரிடமும் விசாரணை நடந்தது. ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் ஆகியோரிடமும் நேற்று விசாரணை நடந்தது. மேலும் ஜெயலலிதா எம்பாமிங் செய்யப்பட்ட அறை, மருத்துவ குழு தங்கி இருந்த அறை,, அமைச்சர்கள், சசிகலா தங்கி இருந்த அறையில் சோதனை நடத்தினார்கள்.

அந்த அறை
அதேபோல் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் ஆய்வு நடந்தது. 2008ஆம் எண் அறையில் ஆய்வு நடந்தது. இந்த அறையில் அவர் சிகிச்சை பெறும் வீடியோதான் சில நாட்களுக்கு முன் டிடிவி தினகரன் ஆதரவாளரால் வெளியிடப்பட்டது. இங்கும் ஆய்வு நடந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications