வெள்ள சேத ஆய்வு: சென்னை வந்தார் அருண் ஜேட்லி- நாளை ஜெ.வுடன் ஆலோசனை!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சென்னை வருகை தந்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவை நாளை பகல் அருண் ஜேட்லி சந்தித்து பேசுகிறார்.
வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வட தமிழகப் பகுதிகளை பிரதமர் மோடி வந்து பார்வையிட்டார். அதன் பின்னர் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் தமிழகம் வந்து ஆய்வு நடத்தினர்.

அப்போது முதல்வர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சந்தித்து பேசினார். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக சென்னை வருகை தந்துள்ளார்.
அவர் நாளை பகல் 12 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து பேச உள்ளார்.












Click it and Unblock the Notifications