அதிமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட ஆசைப்படுகிறாரோ அருண் பாண்டியன்..??
சென்னை: 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் மக்கள் அம்மாவுக்குத்தான் என்று ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள் என்று நடிகரும், அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏவுமான அருண் பாண்டியன் பேசியுள்ளார்.
சட்டசபையில் நடந்த கேள்வி பதில் நேரத்தின்போதுதான் இப்படிப் பேசினார் அருண் பாண்டியன்.

அருண் பாண்டியன் பேசுகையில், எனக்கு அரசியல் அனுபவம் கம்மி. ஆனாலும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் 200 கேள்வி கேட்டாங்க. பதில் இல்லை என்கிறார்கள். ஆனால் நான் 10 கேள்வி கொடுத்தேன். 5 கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. எனவே இந்த அரசை பாராட்டாமல் எப்படி இருப்பது?
தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப கொடுத்து வச்சவங்க. அம்மா ஆட்சியை இந்தியாவே பாராட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. நான் 6 மாதம் கழித்து பஸ் விடக்கோரிக்கை வைத்திருந்தால் பேராவூரணியில் இருந்து டெல்லி வரை பஸ் கிடைத்து இருக்கும்.
நாடாளுமன்றத்துக்கு 534 சீட் உள்ளது. ஆனால் கூட்டணி பற்றி பேசுபவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். தமிழ்நாட்டில் 40 சீட்டை ஏற்கனவே மக்கள் அம்மாவுக்கு என முடிவு செய்து விட்டார்கள்.
வருகிற தேர்தலுக்கு பிறகு இந்த ஆட்சிதான் டெல்லியில் இருக்கும். உங்களால்தான் நாங்கள் உருவாக்கப்பட்டோம். ஆனால் இப்போது நாங்கள் வேறு 'பிராண்டில்' இருக்கிறோம். அது எப்போது மாறும் என்றார் அருண் பாண்டியன்.
பிராண்ட் மாறுவது குறித்து அருண் பாண்டியன் பேசியுள்ளதைப் பா்த்தால் நாடாளுமன்றத் தேர்தலி்ல அதிமுக சார்பி்ல் போட்டியிட சீட் கேட்கிறாரோ என்றே தோன்றுகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications