பாருங்க நல்லா பாருங்க.. நம்ம "லட்சுமி" கமலா மாறி நிற்பதைப் பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நம்ம 'லட்சுமி' கமலா மாறி நிற்பதைப் பாருங்க!..வீடியோ

  சென்னை : சமூக வலைதளத்தில் விவாதப் பொருளாகியிருக்கும் லட்சுமி குறும்பட நாயகி லட்சுமி பிரியாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். ஆனால் அவர் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகையாம். கமலின் பிறந்தநாளன்று அவருடைய கெட்டப்புகளை போட்டு தானும் அசத்தி டுவிட்டரில் டக்கரான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

  நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் சலிப்பான வாழ்வில் ஒரு நாள் வேறொரு ஆடவனுடன் நெருங்கிப் பழகும் சூழ்நிலையே 'லட்சுமி' குறும்படம். சமூக வலைதளத்தில் கடுமையான விவாதப் பொருளான இந்த குறும்படத்தால் உலக அளவில் புகழ் பெற்ற விட்டார் குறும்பட நாயகி லட்சுமி பிரியா.

  சென்னைப் பெண்ணாண லட்சுமி பிரியா, கிரிக்கெட்டிலும் அலாதி பிரியம் கொண்டவராம். இவர் தல டோணியின் சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகை மட்டுமல்ல சிறந்த விளையாட்டு வீரரும் கூடவாம். லட்சுமி கதாபாத்திரமாக வாழ்ந்து திடமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் லட்சுமிபிரியாவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது.

  ஸ்பெஷல் வீடியோ

  லட்சுமி பிரியா புகழின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது போல அவர் யாருடைய தீவிர ரசிகை என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளிற்காக அவர் ஒரு வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  ஏகலைவனின் சமர்ப்பணம்

  ஏகலைவனின் சமர்ப்பணம்

  துரோணாச்சாரியாருக்கு அவரின் ஏகலைவன்களில் ஒருவரது சமர்ப்பணம் என்று அந்த வீடியோவிற்கு தலைப்பிட்டுள்ளார் லட்சுமி பிரியா. கமல்ஹாசனின் அன்பே சிவம் கெட்டப்பில் தொடங்கி பல திரைப்படங்களை வரிசைப்படுத்தி அந்த தோற்றத்திற்கு ஏற்ப தானும் மேக்கப் போட்டு இரண்டு படங்களையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார் லட்சுமி பிரியா.

  அதே பாவனைகள்

  அதே பாவனைகள்

  அபூர்வ சகோதரர்கள் அப்பு, குணா, ஹேராம், குருதிப்புனல், சலங்கை ஒளி, விருமாண்டி என்று எந்த கதாபாத்திரத்தை விட்டுவிடாமல் அச்சு பிசகாமல் மேக் அப் மற்றும் ரியாக்ஷனில் அசத்தி இருக்கிறார். இந்தப் படங்களையும் நடிகர் கமல்ஹாசனிட்ம் நேரிலும் அளித்துள்ளார்.

  பாராட்டுகள்

  பாராட்டுகள்

  வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என்று லட்சுமி பிரியா தன்னுடைய பிரியத்தை கமல்ஹாசனுக்கு டெடிகேட் செய்துள்ளார். சுருக்கமாகச் சொன்னால் அடுத்த உலகநாயகி ஆகும் ஆசையில் லட்சுமி பிரியா இந்த அட்டகாசமான வீடியோவை ரெடி செய்துள்ளார். இவரின் முயற்சியை பலரும் பாராட்டியுள்ளனர்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actress Lakshmipriya chandramouli grabbs attention of people from Lakshmi shortfilm and another news also came into light that she is a diehard fan of Kamalhaasan and she dedicated a special video to him on his birthday.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற