ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு... இலங்கை கடற்படை அட்டகாசம்
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் நாட்டுவெடிகுண்டு வீசியதால் பதட்டம் ஏற்பட்டது.
ராமேஸ்வரத்தில் இருந்து சனிக்கிழமை 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை திரும்பி செல்லுமாறு எச்சரித்தனர்.

இதனைத்தொடர்ந்து மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு, அவசரமாக அங்கிருந்து புறப்பட்டனர்.
அப்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளுக்குள் குதித்து, பிடித்து வைத்திருந்த மீன்களைகடலில் தூக்கி எறிந்தனர். மேலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, படகில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.
பின்னர், சிறிது நேரத்தில் பலத்த சத்தத்துடன் படகின் அடிப்பகுதியில் தீ பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள், உடனடியாக தீயை அணைத்துவிட்டு அங்கிருந்து வேகமாக கரை திரும்பினர்.
கரை திரும்பிய மீனவர்கள் கூறியதாவது, கடந்த சில நாட்களாக இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நேற்று நாட்டு வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் படகு மட்டும் சேதம் அடைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications