பொட்டு கொலையில் ‘ஆபரேசன் அட்டாக்’ முடிந்தது... நெக்ஸ்ட் ராமஜெயம் கொலை வழக்கு
திருச்சி: பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அட்டாக் பாண்டியை கைது செய்த தனிப்படையினரை பாராட்டிய டி.ஜி.பி அசோக்குமார் அடுத்த அசைன்மென்ட்டை எப்போது முடிப்பீர்கள் என்று கேட்டு ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். விரைவில் ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் சி.பி.சி.ஐ.டி போலீசார்.
தமிழக அரசுக்கு தலைவலியாக இருந்த இரண்டு வழக்குகள் முக்கியமானவை அவை 2012ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட வழக்கும், 2013ம் ஆண்டு மதுரையில் நடந்த பொட்டு சுரேஷ் கொலை வழக்கும்தான்.
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முதல் குற்றவாளியான அட்டாக் பாண்டி மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளதால் மதுரை போலீஸாருக்கு இருந்து வந்த தலைவலி முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு ஸ்பெஷல் பாராட்டும் டி.ஜி.பி அசோக்குமாரிடம் இருந்து பெற்றுள்ளனர்.
இதேபோல் ராமஜெயம் கொலை வழக்கையும் எப்போது முடிப்பீர்கள் என்று கேட்டு அடுத்த ஆபரேசனுக்கு தயார்படுத்திவிட்டு சென்றுள்ளார் டி.ஜி.பி அசோக்குமார்.

பொட்டுக்கு முன் போடப்பட்ட ராமஜெயம்
பொட்டு சுரேஷ் கொலையாவதற்கு எட்டு மாதங்களுக்கு முன், 2012 மார்ச் 29 ந்தேதி, திருச்சி- கல்லணை சாலையில், திருவளர்ச் சோலை அருகே காவிரி ஆற்றின் கரையில், ராமஜெயம் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 8 க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டும், இந்த வழக்கில் முன்னேற்றம் இல்லாத நிலையில், வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

கொலையாளி யார்
ராமஜெயம் கொலை வழக்கில் கொலையாளி என்றும் கொலைக்கான காரணம் எது என்றும் இதுவரை கண்டறியப்படவில்லை. சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணையில் எந்த க்ளுவும் கிடைக்கவில்லை. மூன்றாண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் கொலையாளி யார் என்பதை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அக்டோபர் 28 வரை அவகாசம்
ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, கடந்த டிசம்பர் மாதம் ராமஜெயத்தின் மனைவி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில், "வழக்கின் குற்றவாளிகளை நாங்களே கண்டுபிடித்துவிடுகிறோம்" என பல முறை அவகாசம் கேட்ட சிபிசிஐடி போலீஸாருக்கு, வரும் அக்டோபர் 28 ந் தேதிவரை அவகாசம் கொடுத்துள்ளது உயர் நீதிமன்றம்.

உண்மை கண்டறியும் சோதனை
ராமஜெயம் கொலை வழக்கை முடிக்க நினைக்கும் சிபிசிஐடி போலீசாருக்கு, கடைசி நம்பிக்கையாக உள்ளது உண்மையறியும் சோதனைதான்.
கடந்த ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் ராமஜெயத்தின் உதவியாளர்களாக இருந்த கேபிள் மோகன், திருச்செங்கோடு நந்து ஆகிய இருவரிடம் உண்மையறியும் சோதனை நடத்தினார்கள். சோதனையில் கேட்கப்பட்ட 83 கேள்விகளுக்கு இவர்கள் பதில் சொன்னதாக தெரிகிறது.

சந்தேக வளையத்தில்
சிபிசிஐடி போலீஸாரின் பார்வை, மீண்டும் ராமஜெயத்தின் வலதுகரமாக வலம் வந்த வினோத் மற்றும் அவரை சார்ந்தவர்களை விசாரணைக்கு எடுக்க முடிவு செய்துள்ளனர்.அதன் அடிப்படையில் வினோத், கோபால்ராஜ், வினோத்தின் நண்பன் ஸ்ரீரங்கம் சங்கீத், முல்லைக்குடி சண்முகம் ஆகியோர்தான் இப்போதைய சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை வளையத்தில் இருப்பவர்கள்.

தகவல் சொன்ன நண்பன்
ராமஜெயம், காணாமல் போன அன்று, 7.30 மணிக்கே வினோத்தின் நண்பன் ஶ்ரீரங்கம் சங்கீத் என்பவனுக்கு நந்து போன் செய்து தகவலை சொல்லி இருக்கிறான். இதே நேரம் வினோத்தின் அப்பா கோகுல்ராஜ், ராமஜெயம் வாக்கிங் போய்விட்டு வந்து ஷெட்டில் இறகு பந்து விளையாடும் கிரவுண்டில் இருந்துள்ளார். இவர்களுக்கும் இந்த கொலைக்கும் சம்மந்தம் இருக்கின்றதா என்பதும் கண்டறியப்பட வேண்டும்.

யார் மீது சந்தேகம்
வினோத் கூறிய பதில்களும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. அவரது தந்தை கோகுல்ராஜை அடுத்து உண்மையறியும் சோதனைக்கு உட்படுத்த இருக்கிறோம். இந்த கொலைக்கு விசாரணை அதிகாரியாக இருந்த முன்னாள் ஸ்ரீரங்கம் ஏசியும் மன்னார்குடி திவாகரன் சம்மந்தியுமான ஜெயச்சந்திரன் மீதும் சந்தேகம் உள்ளது. இவர்களுக்கு தெரியாமல் ராமஜெயம் கொலையில் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை" என சொல்லும் போலீசார், சாமிரவி எனும் பிரபலமான ரவுடிக்கு இந்த கொலைவழக்கில் சம்மந்தம் இருக்கலாம் என கூறுகின்றனர்.

ஒய்வு பெற்ற நீதிபதி
அதேபோல ராமஜெயத்தின் உதவியாளர்களாக இருந்த வேலு, அமுதன் ஆகியோரும் சந்தேக பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள் சொல்லும் பதில்களை உண்மையறியும் குழுவில் சொல்லப்படும் தகவல்களையும் ஒப்பிட்டு பார்த்து வருகின்றார்கள். இவர்கள் இல்லாமல் ஓய்வுபெற்ற நீதிபதி மணி என்பவரிடம் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளார்கள்.

கையெழுத்து வாங்கிய போலீஸ்
கடத்தி கொலை செய்யப்பட்ட மார்ச் 29ம்தேதி காலை 5.30மணிக்கு வீட்டிலிருந்து வெளியே வந்ததாக சொல்லப்படும் ராமஜெயம், வாக்கிங் வந்ததை பார்த்தேன். அவர் என்னிடம் பேசிவிட்டுதான் போனார்" என்று நீதிபதி மணி உறுதியாக சொன்னாராம். பலமுறை இதை சொல்லியும் போலீஸார், இல்லையில்லை அவர் முதல் நாள் இரவே கொலை செய்யப்பட்டு விட்டார் என்றெல்லாம் சொல்லி கையெழுத்து வாங்கினார்கள்.

வதந்தி கிளப்பியது ஏன்
எனினும் நீதிபதி மணியோ விசாரணையின்போது உண்மையை மட்டும்தான் சொல்வேன்' என இப்போதும் கூறி வருகிறார். ராமஜெயம் அதிகாலை வாக்கிங் போனபோதுதான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். அவர் முதல்நாள் இரவு கடத்தப்பட்டார் என சொல்லப்பட்டவை எல்லாம் அப்போதைய விசாரணை அதிகாரிகள் கிளப்பிய வதந்திகள் என உறுதியாகியுள்ளது.

நெருங்கிய உறவினர்கள்
ராமஜெயம் கொலை வழக்கு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. இந்த கொலை வழக்கில் ராமஜெயத்தின் குடும்ப உறுப்பினர்கள் இல்லாத நெருங்கிய சொந்தங்கள் துணை இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. அதை விரைவில் உறுதிபடுத்துவோம் என்கிறார்கள்.

கொலையாளி யார்?
ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீஸார், அக்டோபர் 28ம் தேதிக்குள் மதுரை உயர் நீதிமன்றத்தில் குற்றவாளி யார் என்று நிரூபிக்க வேண்டும் கட்டாயத்தில் இருக்கிறார்கள்,. இதனால் ஐ.ஜி மகேஷ்குமார் அகர்வால் கடந்த சில வாரங்களாக அனைத்தையும் தொகுத்து விஞ்ஞானப் பூர்வமாக அறிக்கை தயாரிக்கிறார். நிச்சயம் குற்றவாளிகள் குறித்த தகவல்களை உயர் நீதிமன்றத்தில் சொல்வோம் என்கிறார்கள் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகள். பொட்டு சுரேஷ் வழக்கில் கொலையாளி யார் என்று தெரிந்து தேடி கண்டுபிடித்தனர். ஆனால் ராமஜெயம் கொலை வழக்கில் கொலையாளி யார் என்பதையே இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உண்மை.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications