ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் பன்னா இஸ்மாயில் கைது!

இந்து முன்னணி, பா.ஜ.க. பிரமுகர்கள் கொலை வழக்குகளில் தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அபுபக்கர் சித்திக்கை தேடி வருகின்றனர்.
வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த்ரெட்டி, ஆடிட்டர் ரமேஷ், பரமகுடி முருகன் ஆகியோர் கொலை வழக்கில் பக்ருதீன், மாலிக்கை காவலில் எடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்தனர்.
இந்த நிலையில் மதுரை திடீர்நகர் பால்காரர் சுரேஷ் கொலை வழக்கில் நேற்று வேலூர் சிறையில் இருந்த பக்ருதீன், மாலிக் இருவரையும் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை ஜே.எம். 4வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வேலூர் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் கொலை வழக்கில் பன்னா இஸ்மாயிலை சிபிசிஐடி காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது வெள்ளையப்பனை கொலை செய்தது புத்தூர் வீட்டில் இன்ஸ்பெக்டர் லெட்சுமணனை தாக்கியது எப்படி என்பது பற்றி நடித்து காட்டினான். அவனிடமிருந்து பல ஆதாரங்களை சேகரித்தனர்.
இந்நிலையில், ஆடிட்டர் ரமேஷ் படுகொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட பன்னா இஸ்மாயிலை சிபிசிஐடி காவல்துறையினர்கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ஆஜர்படுத்த அவரை சேலம் வடக்கு குற்றப்பிரிவு உதவி ஆணையர் அசோகன் தலைமையிலான காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் இன்று அழைத்து சென்றனர்.
சேலம் ஜே.எம்.4வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் பன்னா இஸ்மாயிலை காவலில் விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் மனுதாக்கல் செய்கின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications