மதுவால் ஒரு கொலை... டாஸ்மாக் பாரில் தகராறு - ஆட்டோ ஓட்டுனரை பாட்டிலால் குத்திய காவலர்
நெல்லை: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே டாஸ்மாக் பாரில் நடந்த தகராறில் ஆட்டோ டிரைவரை போலீஸ்காரர் கத்தியால் குத்திக் கொன்றார்.
ஆலங்குளம் அருகேயுள்ள மருதகுளம் பகுதியை சார்ந்தவர் சண்முக சுந்தரம். இவர் சுரண்டை காவல் நிலையத்தில் காவலராகவும், ஜீப் ஓட்டுனராகவும் பணியாற்றுகிறா்.

ஆலங்குளம் -ஊத்துமலை செல்லும் பாதையில் உள்ள நாச்சியார்புரம் விலக்கு பகுதியிலுள்ள ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடைக்கு பார் கிடையாது. ஆனாலும் அப்பகுதியில் உள்ள ஒருவர் சின்ன தகர செட் போட்டு குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வைத்து மினி பார் நடத்தி வருகிறார்.

அந்த பகுதிக்கு காவலர் சண்முகசுந்தரம் மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு நெட்டூர் பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுனர் இசக்கிமுத்து என்பவரும் இருந்ததாக கூறப்படுகிறது. இருவருக்குள்ளும் ஏதோ வாய்த்தகராறு ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் காவலர் சண்முகசுந்தரம் ஆட்டோ ஓட்டுனர் இசக்கிமுத்துவை மது பாட்டிலால் குத்தியுள்ளார். இதில் இசக்கிமுத்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து காவலர் சண்முகசுந்தரம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications