காரைக்குடி பள்ளியில் கோலாகல விருது விழா.. மாணவர்கள் கலக்கிய சைனீஸ் நடனம்.. கேரளா டான்ஸ்!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியின் மூன்றாம் ஆண்டு விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
எல்சிடிஎல் பழனியப்பச் செட்டியார் நினைவரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர். வி.பாலச்சந்திரன் தலைமையேற்றார்.
தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் ஏ மாரிமுத்து முன்னிலை வகித்தார். சென்னை டி.வி.எஸ். நிறுவனத்தின் பொதுமேலாளர் எம்.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர்கள் விஜயகாந்தி மற்றும் கோமதிஜெயம் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.

சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துகள்
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் முனைவர். சாமி. சத்தியமூர்த்தி, தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் முனைவர். ஆர். சந்திரமோகன், அழகப்பா பல்கலைக்கழக வரலாற்று துறைத் தலைவர் முனைவர். கிருஷ்ணமூர்த்தி, கல்வியியல் துறை பேராசிரியர் சரவணக்குமார், எஸ்எஸ்ஏ கல்லூரி முதல்வர் ஹேமமாலினி, பள்ளிக் கல்வித்துறை முன்னாள் துணை இயக்குநர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

விருது வழங்குதல்
விழாவில் 2015 -16ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள், சமூகவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்கள், வகுப்பில் சிறந்த மாணவர்கள், சிறந்த சாரண சாரணியர் மாணவர்கள், இளம் விஞ்ஞானி விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.

ஆசிரியர்களுக்கும் விருதுகள்
2015 -16ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில் கேரளா நடனம், சைனீஸ் நடனம், லொள்ளு சபா, மிமிக்ரி போன்ற மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொகுத்து வழங்கிய மாணவர்கள்
மாணவர்களே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். இவ்விழாவில் தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள பல்வேறு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், காரைக்குடி அகரம் அரிமா சங்கம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டுசிறப்பித்தனர்.

பெற்றோர்கள் - பொதுமக்கள்
பெற்றோர்கள், மற்றும் காரைக்குடி வாழ் பொது மக்கள் ஆகியோர் திரளாக வருகை தந்து விழாவை கண்டு களித்தனர். பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி நன்றியுரை கூறினார். பள்ளியின் ஆசிரியர்க நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications