நில அபகரிப்பு வழக்கு: ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி மு.க.அழகிரி மனு
மதுரை: நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப். 19-ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
திருமங்கலம் சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரிக்காக விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 7 பேர் மீது, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் மு.க.அழகிரிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, மு.க.அழகிரி மதுரை நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார்.

நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் முன்பு தினமும் காலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என அழகிரிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி, அவர் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில், இந்த நிபந்தனையை தளர்த்தக்கோரி மு.க.அழகிரி தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், நீதிமன்ற நிபந்தனை அடிப்படையில் கடந்த 13 நாள்களாக நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் முன் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறேன். இந்த வழக்கில் என் சார்புடைய விசாரணை முடிந்துவிட்டது. விசாரணையின் போது ஆய்வாளர் தெரிவித்த அனைத்து கேள்விகளுக்கும் விடை அளித்துள்ளேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினேன். கால் நகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறேன். தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியதுள்ளது. எனவே, ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கே. கல்யாணசுந்தரம் முன் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அழகிரி சார்பில் வழக்கறிஞர் மோகன் குமார் வாதிட்டார். அரசு வழக்கறிஞர் கே.அன்பரசன் வாதிடும்போது, நில அபகரிப்பு வழக்கை விரைவில் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், குறைந்தபட்சம் 20 நாளாவது நீதிமன்றம் விதித்த நிபந்தனையை நிறைவேற்றிய பின்னரே நிபந்தனை தளர்வு கோரி மனு தாக்கல் செய்யலாம்' என்றார். இதையடுத்து, விசாரணையை செப். 19ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications