செயற்குழு கூட்டத்துக்கு முன்னதாக ஸ்டாலினுக்கு பிபியை எகிற வைக்கும் அழகிரி!
முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி தனது தந்தையின் நினைவிடத்தில் இன்று குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் எனது தந்தையிடம் எனது ஆதங்கத்தை வேண்டிக் கொண்டேன்; அது இப்போது தெரியாது.

பிபியை எகிற வைத்த அழகிரி
கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் உடன்பிறப்புகள் என்னுடன் தான் இருக்கின்றனர். அதற்கு காலம் பதில் சொல்லும் என்றார். அழகிரியின் இந்த பேட்டி ஸ்டாலின் மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களின் பிபியையும் எகிற வைத்துள்ளது.

நாளை செயற்குழு
நாளை திமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அழகிரி அளித்துள்ள இந்த பேட்டி ஸ்டாலினை பயமுறுத்துவதற்காகவே என கூறப்படுகிறது. திமுகவில் இருந்து அழகிரி கடந்த 2014ஆம் ஆண்டு நீக்கப்பட்டார்.

முக்கிய பொறுப்பு
அழகிரி இதுவரை கட்சியில் சேர்க்கப்படவில்லை. கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த நிலையில் அழகிரி கட்சியில் தனக்கென முக்கிய பொறுப்பை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளன.

ஸ்டாலினுக்கு அறிவுறுத்தல்
குடும்பத்தினரும் பாஜக, அழகிரியை வளைக்கும் முன்பு கட்சியில் நல்ல பொறுப்பை கொடுத்து அவரை நம்முடன் வைத்துக்கொள்ள வேண்டும் என ஸ்டாலினுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

ஸ்டாலினுக்கு மிரட்டல்?
இந்நிலையில் அழகிரி இன்று அளித்த பேட்டி உண்மை விசுவாசிகள் தன்பக்கம் இருப்பதாக கூறியிருப்பதால், கட்சியில் முக்கிய பொறுப்பு தராவிட்டால் தனிக்கட்சி தொடங்கிவிடுவேன் என்று ஸ்டாலின் தரப்பை மிரட்டுவதற்காகவே என கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications