ஊர் ஊராகக் கிளம்புகிறார் மு.க.அழகிரி- டூர் புரோகிராம் அறிவிப்பு!
சென்னை: மு.க.அழகிரி முழு வீச்சில் தனது ஆதரவாளர்களைச் சந்திக்க ஆரம்பித்துள்ளார். அவர் அடுத்தடுத்துப் போகவிருக்கும் ஊர்கள் குறித்த ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது.
திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு விட்ட நிலையில் தனது பலத்தை எந்த வழியில் அழகிரி நிரூபிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அவரோ அமைதி காக்கிறார். புதுக் கட்சி தொடங்க மாட்டேன் என்கிறார். கட்சி மீது வழக்குப் போடப் போவதாகவும் கூறியுள்ளார்.
அதேசமயம், தனது ஆதரவாளர்களை அவர் ஆங்காங்கே போய் பார்த்தபடி இருக்கிறார். இதன் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் பல்வேறு ஊர்களுக்கும் அவர் செல்லவுள்ளார். தேதி வாரியாக இதுகுறித்த ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 2ம் தேதி தஞ்சாவூர் செல்கிறார் அழகிரி. 6ம் தேதி முதுகுளத்தூர், 9ம் தேதி கம்பம், 12ம் தேதி நெல்லை, 13ம் தேதி நாகர்கோவிலில் தனது ஆதரவாளர்களைச் சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பின்போது திமுக அதிருப்தியாளர்களும் திரளாக அழகிரியைச் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 12ம் தேதி நெல்லை வரும் அழகிரிக்கு திமுகவே அதிரும் வகையில் பிரமாண்டமான வரவேற்பு தரவும் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனராம்.
குமரி அனந்தன் தம்பி சந்திப்பு
இதற்கிடையே, கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பி்ல போட்டியிடும் வசந்தகுமார், மு.க.அழகிரியை இன்று சந்தித்துப் பேசினார். மேலும் ஆதரவும் கோரினார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் தம்பிதான் வசந்தகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications