மூன்று மாதமேயான குட்டி யானை...குழிக்குள் விழுந்த பரிதாபம் - வீடியோ
கிருஷ்ணகிரி, தளிப் பகுதியில் மூன்று மாதமேயான குட்டியானை தவறி குழிக்குள் விழுந்துவிட்டது.அதனை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு காட்டுக்குள் அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தளியை ஒட்டிய காட்டுப் பகுதியில், ஒரு பாறைக் குழியில் மூன்றுமாத யானை குட்டி விழுந்தது. மேலே வரமுடியாமல் தவித்த யானைக்குட்டியை வனத்துறையினர் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.
தமிழ்நாட்டில்கடந்த 140 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சியால் மனிதர்கள் அவஸ்தைப்படுவதைப்போல் காட்டில் வாழும் விலங்குகளும் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றன. காட்டில் உள்ள நீரோடை, சிற்றாறுகளில் நீர் வற்றிவிட்டதால், குடிநீருக்காக அனைத்து விலங்குகளும் அலைந்து வருகின்றன.

அப்படி குடிநீர்த் தேடி அலையும்போது வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் வருகின்றன. அப்படி வரும் விலங்குகள் தெரியாமல் ஆங்காங்கேயிருக்கும் குழிக்குள் விழுந்துவிடுகின்றன.
சிலநாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி காட்டுப் பகுதியில் காட்டுப் பன்றிகள் நீர் இல்லாத கிணற்றில் விழுந்துவிட்டன. பின்பு வனத்துறையினர் அவற்றை மீட்டு காட்டுக்குள் விட்டனர். இம்மாதிரியான சமயங்களில் விலங்குகள் மரித்துவிடுவதும் உண்டு.
அதேபோல், நேற்று தளியைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதியில், வனத்தை விட்டு வெளியேறி வந்த மூன்றுமாத யானைக் குட்டி பாறைக் குழிக்குள் விழுந்துவிட்டது. அதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் யானைக்குட்டியை பத்திரமாக மீட்டு, மீண்டும் காட்டுக்குள் அனுப்பி வைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications