For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

70 மணல் குவாரிகளை திறக்க முடிவு செய்த தமிழக அரசுக்கு கோர்ட் போட்ட பிரேக் #sandquarry

70 மணல் குவாரிகளைத் திறப்பதற்கு முடிவு செய்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று அளித்துள்ள தீர்ப்பு சம்மட்டி அடியாகும்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் கூடுதல் 70 மணல் குவாரிகளைத் திறப்பதற்கு முடிவு செய்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அளித்துள்ள தீர்ப்பு சம்மட்டி அடியாகவே கருதப்படுகிறது.

    தமிழகத்தில் மணல் வளங்களை சுரண்டி சுரண்டி இயற்கை வளங்களை மணல் மாபியாக்கள் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தனர். இதற்கு சில அரசியல்வாதிகளும் உடந்தையாகவே இருந்தனர்.

    ஆட்சி அதிகாரத்துக்கு வரும் அரசியல்வாதிகளின் உறவுகள் எல்லாம் கூடி குடும்பம் குடும்பமாக ..யார் யாரோ அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடன் மணலை அத்துமீறி சுரண்டி வருகின்றனர்.

    ஏற்றுமதி அளவும் குறைந்தது

    ஏற்றுமதி அளவும் குறைந்தது

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோர்ட் கெடுபிடி காரணமாக, பெரிய அளவில் மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மணல்களின் அளவும் குறைந்து இருக்கிறது. இதனால் மணல் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை செய்வதற்காக தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த சில நாள்களுக்கு முன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூடுதல் மணல் குவாரி

    கூடுதல் மணல் குவாரி

    தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் 70 புதிய மணல் குவாரிகளைத் தொடங்க வேண்டும் என அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை.

    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை

    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை

    இந்த நிலையில்தான் அதிரடியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிய குவாரிகளை திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உயர்நீதிமன்றம் மதுரை கிளை

    உயர்நீதிமன்றம் மதுரை கிளை

    தமிழக அரசு புதிதாக 70 குவாரிகளை திறக்கவிருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவானது தமிழக அரசுக்கு பெரும் சம்மட்டி அடியாகவே பார்க்கப்படுகிறது.

    English summary
    CM Edappadi Palanisamy has decided to open 70 new quarries. In the meanwhile, Chennai HC's Madurai branch has ordered to close all the sand quarries in TN within 6 months. Chennai HC's Madurai branch has blow TN government on hammer.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X