அடேங்கப்பா.. ஒரு வாழை இலை 5 ரூபாயாமே...!

Subscribe to Oneindia Tamil

புதுகை: தமிழகத்தில் சுப தினங்கள் வரிசை கட்டி வருவதால் திருமணம், காதணி மற்றும் விருந்து விழாக்களுக்கு விருந்தினர்களுக்கு உணவளிக்கும் வாழை இலை விலை வேகமாக உயர்ந்துள்ளது. ஒன்று ரூபாய் 5 க்கு விலை உயர்ந்துள்ளது.

ஒவ்வொருவர் வீட்டிலும் விருந்தினர்களுக்கு விருந்து கொடுக்க வாழைகளில் விருந்து கொடுப்பது தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தில் ஒன்றாக அமைந்துவிட்டது.

Banana leaf rate exceed due to Mukurthams in TN

ஆனால் இன்று நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு தட்டுகளில் உணவளிக்கம் பழக்கமும், விருந்துகளுக்கு காகித இலைகள் போடும் பழக்கமும் பரவத் தொடங்கிவிட்டது.

அப்படியே இருக்கும் புதுக்கோட்டை:

ஆனாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலும் வாழை இலையிலேயே உணவளிப்பது இன்னும் மாறவில்லை. உணவு விடுதிகளிலும் காகித இலைகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டாலும் வாழை இலை உணவுக்கே தனி மகத்துவம் உண்டு.

கீரமங்கலம், வட காடு, கொத்தமங்கலம்:

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம், மேற்பனைக்கா, குளமங்கலம் மற்றும் சுற்றவட்டார கிராமங்களில் வாழை தோட்டங்கள் அதிகமாக இருந்தது.

வெளியூர்களுக்குப் போகிறார்கள் இலை வாங்க:

அதனால் வாழை இலை உள்@ர் தேவைகளுக்கு மட்டுமின்றி வெளியூர்களுக்கும் விற்பனைக்கு போன காலம் மாறி கடந்த சில ஆண்டுகளாக வெளியூர்களில் இருந்து வாழை இலை வாங்கி வந்து விருந்து படைக்கும் நிலை வந்துவிட்டது.

அதிகரிக்கும் மொய் விருந்துகள்:

கடந்த சில மாதங்களில் கீரமங்கலம், வடகாடு சுற்றுவட்டாரத்தில் சுமார் 50 கிராமங்களில் தினம் 50 மொய் விருந்துகள் நடந்தது.

அப்ப விலை பரவாயில்லையே:

ஆனாலும் அந்த நேரத்தில் இப்பகுதிக்கு மட்டுமே இலை தேவை இருந்ததால் ஒரு சாப்பாட்டு இலை விலை ரூபாய் 1.50 முதல் 2 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

ஆவணி பிறந்தாலும் பிறந்தது:

ஆனால் ஆவணி மாதம் பிறந்ததும் தமிழகம் முழுவதும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டதால் சில நாட்களுக்குள் ஒரு சாப்பாட்டு வாழை இலையின் விலை ரூபாய் 5 க்கு உயர்ந்துவிட்டது. அதனால் பல இடங்களில் திருமண மண்டபங்களில் காகித இலைகளை பயன்படுத்தவும் தொடங்கிவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+