ரெஸ்ட் எடுக்கப் போன பைலட்.. 12 மணி நேரம் லேட்டான கோவை- பெங்களூரு விமானம்; பயணிகள் அவதி
கோவை: கோவை விமான நிலையத்தில் கோவை-பெங்களூரு விமானத்திற்கு விமானி இல்லாததால் 12 மணி நேரம் பயணிகள் காத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து "ஜெட் ஏர்வேஸ்" நிறுவனத்தின் 80 பேர் பயணிக்கக் கூடிய சிறிய இரக விமானம் ஓன்று நேற்று முன்தினம் இரவு கோவை வந்தது. சென்னையில் இருந்து விமானத்தை ஓட்டி வந்த விமானி தனது பணி நேரம் முடிந்து விட்டது எனக்கூறி தனது ஓய்வு அறைக்குச் சென்று விட்டார்.

இரவு 10 மணிக்கு பெங்களூரு புறப்பட வேண்டிய இந்த விமானத்தை இயக்க மாற்று விமானியும் இல்லாத நிலையில் வேறு வழியில்லாத காரணத்தால் பயணிகள் அனைவரும் அருகேயுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானியின் 12 மணி நேர ஓய்வு முடிந்து விமானி பணிக்கு திரும்பியதை அடுத்து நேற்று மதியம் அந்த விமானம் பெங்களூரு புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள், "விமான போக்கு வரத்து விதிகளின்படி எட்டு மணி நேரத்துக்கு மேல் விமானி பணி செய்யக்கூடாது. பயணிகள் பாதுகாப்புக்காக இச்சட்டம் மிக கடுமையாக பின்பற்றப்படுகிறது.
இதை மீறி விமானத்தை இயக்கினால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று விமானியின் பணி நேரம் முடிந்ததால் முறைப்படி அவர் 12 மணி நேர ஓய்வுக்கு சென்றுவிட்டார்" எனத் தெரிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications