சென்னையில் ஏ.டி.எம்.முக்கு பணம் கொண்டு செல்லும் வாகனத்தை கடத்தி ரூ.15 லட்சம் கொள்ளை
சென்னை: சென்னை மண்ணடியில் ஏ.டி.எம். ஒன்றில் பணம் நிரப்புவதற்காக ரூ.37 லட்சம் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை கடத்தி அதிலிருந்து ரூ.15 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மண்ணடியில் ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்காக ஒரு வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலருடன் பணம் கொண்டுசெல்லப்பட்டது.

வடக்கு கடற்கரை காவல் நிலையம் அருகே சென்றபோது வேனை மர்ம நபர்கள் வழி மறித்தனர். பின்னர் வேனில் பாதுகாப்புக்கு சென்ற காவலாளியை தாக்கிவிட்டு பணத்துடன் வேனைக் கடத்திச் சென்று விட்டனர்.
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட சோதனையில் அந்த வாகனம் ராயபுரத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து வாகனத்தை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர். அப்போது பணம் வைக்கப்பட்டிருந்த இரண்டு பெட்டிகளை உடைத்து ரூ.15 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வாகனத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சொந்தமான பணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வாகனத்தின் ஓட்டுநர் நாராயணன், பாதுகாவலர் சுரேந்தினிடம் வடக்கு கடற்கரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications