ரூபாய் நோட்டு உத்தரவால் பொருளாதாரத்தில் தாக்கம்.. எந்த துறை வீழும், எந்த துறை வளரும்?
ரூபாய் நோட்டு உத்தரவால் ரியல் எஸ்டேட் துறைக்கு அடி விழும், வங்கித்துறை வளரும் என கூறப்படுகிறது.
சென்னை: ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுக்கள் மீதான தடை பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பல துறை வல்லுநர்களும் கூறுகிறார்கள்.
இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, மொத்த பண புழக்கத்தில், ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் 86.4 சதவீத பங்குகளை வகித்தது என்கிறது ரிசர்வ் வங்கி. இதன் மதிப்பு 14 ட்ரில்லியன். கடந்த ஐந்து வருடங்களில்தான் இந்த நோட்டுக்கள் புழக்கம் மிக, மிக அதிகரித்துள்ளதாம்.

இப்படிப்பட்ட நிலையில், அந்த நோட்டுக்கள் மீது தடை விதித்துவிட்டு குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வினியோகம் செய்ய ஆரம்பித்துள்ளன.
இதுகுறித்து நோமுரா நிறுவனம் தரப்பில் கூறுகையில், "வங்கிகளில் டெபாசிட் குவியும் என்பதால் இது அத்துறைக்கு மிகப்பெரிய வளர்ச்சியாக இருக்கும். குறைந்த வட்டியில் வங்கிகளால் கடன் கொடுக்க முடியும். கிராமப்புறங்களிலும் அனைவரும் இனி வங்கி கணக்கு தொடங்குவார்கள். இது அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்க வகை செய்யும். ரியல் எஸ்டேட் தொழிலில் கருப்பு பணம் விளையாடுகிறது. கருப்பு பணத்திற்கு கணக்கு காட்ட வேண்டிவரும் நிலை உருவாகியுள்ளதால் ரியல் எஸ்டேட் மார்க்கெட் அடி வாங்கும்" என்று கூறினர்.
போபா மெர்ரில் லைன்ஸ் குளோபல் ரிசர்ச் குரூப் தரப்பில் கூறுகையில், "வங்கிகளில் வரலாறு காணாத அளவுக்கு டெபாசிட் கூடும் என்பதால், வங்கிகள் மீதான ஸ்திரத்தன்மை அதிகரிக்கும். தங்கத்தின் இறக்குமதி தேவையை ஆர்.பி.ஐ குறைக்கும் என கருதலாம்" என்று தெரிவித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications