இன்றும் நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை.. ஏடிஎம்களுக்கு படையெடுக்கும் மக்கள்
வங்கிகளுக்கு இரண்டு நாள்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் பணம் எடுக்க பெரும் இன்னல்களை சந்திக்கும் அபாயம் எழுந்துள்ளது.
சென்னை: 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகளுக்கு தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் அன்றாடச் செலவுக்கு பணம் எடுக்க மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
நான்காவது சனிக்கிழமை என்பதால் இன்றும், ஞாயிற்றுக்கிழமை ஆதலால் நாளையும் வங்கிகளுக்கு இரண்டு நாள்கள் தொடர்ந்து விடுமுறை வந்துள்ளது. இதனால் அன்றாடச் செலவுகளுக்கு பணம் எடுக்க முடியாமல் மக்கள் பெரும் இன்னல்களை சந்திக்க நேர்ந்துள்ளது. அனைத்து மக்களும் பணம் எடுக்க ஏடிஎம்களை மட்டுமே நம்பி இருப்பதால் அனைத்து ஏடிஎம்களும் முடிங்கும் நிலை எழுந்துள்ளது.

ஒவ்வொறு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் கடந்த ஆண்டு முதல் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. எனவே, மக்களின் சிரமத்தை போக்குவதற்காக கடந்த ஒரிரு வாரங்களாக வங்கிகள் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மக்களுக்கு சேவை புரிந்தன.
இந்நிலையில், இம்மாதம் 24-ம் தேதியுடன் அரசு அறிவித்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால கெடு முடிந்தது. எனவே, வங்கிகளும் கூடுதல் நேரம் பணியாற்றுவதை தவிர்த்துள்ளன. இதனால், மக்கள் வழக்கம் போல் ஏடிஎம்களை நம்பியே பணம் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுளள்னர். 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் வராத நிலையில் ஏடிஎம்களில் அதிக அளவில் பணம் எடுக்கும் சூழல் எழுந்திருப்பதால் அவைகள் விரைவில் முடங்கும் அபாயம் எழுந்துள்ளது. வங்கிகள் அனைத்தும் திங்கள்கிழமை தான் வழக்கம்போல செயல்படும்.
எனவே, வங்கி அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகின்றன.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications