நிரந்தரமாக மூடப்படும் ஏடிஎம்கள்.. பெரும் தவிப்பில் மக்கள்!
சென்னை: பண ஒழிப்பு நடவடிக்கை காரணமாக மூடப்பட்ட ஏடிஎம்களில் 90 சதவீதம், கிட்டத்தட்ட 2 மாதங்களாகியும் திறக்கப்படவே இல்லை. இதனால் பொது மக்களின் அவதி மேலும் தொடர்கிறது.
கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி 100, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறித்தார். இரண்டு நாட்கள் ஏடிஎம்கள் மூடப்படும் என்றும், அதற்குப் பிறகு புதிய நோட்டுகளை வழங்குவதற்கேற்ப ஏடிஎம்கள் சரி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தேவைப்பட்டது ஏடிஎம் எந்திரங்களில் திருத்தம் செய்ய.

அதன் பிறகும் கூட ஏடிஎம்கள் செயல்படவில்லை. எப்போதும் திறந்திருக்கும் ஏடிஎம்களின் ஷட்டர்களை இழுத்து மூடி பூட்டே போட்டு விட்டார்கள். சென்னையில் 90 சதவீத ஏடிஎம்களில் பணமில்லை அல்லது மூடப்பட்டுள்ளன. சிறு நகரங்கள், கிராமப் புறங்களில் கிட்டத்தட்ட ஏடிஎம்களே இல்லை என்றாகிவிட்டது. அங்கே வங்கிகளில் மட்டுமே பணம் எடுக்க முடிவதாக, அதுவும் ஏதாவது ஒரு நாள்தான் பணம் தரப்படுவதாக மக்கள் தொடர்ந்து புகார்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால் அதைக் காது கொடுத்துக் கேட்கத்தான் யாருமில்லை.
இன்னொரு விஷயம் சத்தமின்றி நடந்து வருகிறது. பூட்டுப் போடப்பட்ட பல ஏடிஎம்களின் பலகைகள் இரவோடு இரவாக காணாமல் போய் வருகின்றன. அதாவது ரூபாய் நோட்டு ஒழிப்பு மாதிரி ஏடிஎம்கள் ஒழிப்பு. நிறைய ஏடிஎம்கள் இருந்த பகுதிகளில், சில மையங்களை நிரந்தரமாகவே மூடிக் கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அந்த ஏடிஎம் காவலாளிகளை 'இப்போதைக்கு உங்களுக்கு வேலையில்லை.. கிளம்புங்கள்' எனக் கூறி வங்கிகள் அனுப்பியுள்ளன.
பணமில்லா பொருளாதாரத்தில் ஏடிஎம்கள் தேவையில்லை எனற அடுத்த அறிவிப்பும் விரைவில் வெளியாகக் கூடும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications