நோ டென்ஷன் மக்களே... 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகளில் கூடுதல் கவுண்டர்கள்!
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வங்கிகளில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மக்கள் சவுகரியமான வகையில் தங்களது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்காக வங்கிகளில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் நேரத்திலும் வங்கிகள் பணியாற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்து விட்டது. மக்கள் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மக்களிடையே நிச்சயம் பெரும் குழப்பமும் பீதியும் ஏற்படும் என்பதை உணர்ந்துள்ள மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மும்பையிலும், டெல்லியிலும் கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளது.
இன்று நாடு முழுவதும் வங்கிகள் செயல்படாது. நாளை முதல் வங்கிகளில் மக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். மக்களின் வசதிக்காக வங்கிகள் கூடுதல் நேரத்தில் செயல்படும். மேலும் கூடுதல் கவுண்டர்களும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications