கொலை செய்ய தூண்டிய பானுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்க விஜயன் மனைவி சுதா வலியுறுத்தல்!
கணவர் விஜயனை கொலை செய்யத் தூண்டியது பானுதான் என்றும் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் அவரது மனைவி சுதா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில் பானு உட்பட 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு விஜயன் மனைவி சுதா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா. இவரது கணவர் விஜயன் என்ற எம்.ஜி.ஆர். விஜயன். இவர், 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி இரவு காரில் கோட்டூர்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பல் காரை வழிமறித்து விஜயனை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தது.
இந்த கொலை வழக்கில் விஜயனின் மனைவி சுதாவின் சகோதரி பானு உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். சொத்து தகராறில் நடந்த கொலையில் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மேல்முறையீடு
பானு உட்பட 7 பேரும் ஆயுள் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வெளியானது.

விடுதலை
இதில் சுதாவின் சகோதரி பானு, கார்த்திக் ஆகிய 2 பேரும் விடுதலை செய்ய்யப்பட்டனர். மேலும் 5 பேருக்கு ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது.

அதிருப்தி
இந்த தீர்ப்பினால் விஜயனின் மனைவி சுதா கடும் அதிருப்தி அடைந்துள்ளார். கொலை செய்யத் தூண்டியது பானுதான் என்றும் அவருக்கு கண்டிப்பாக ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்றும் சுதா ஆவேசமாக கூறினார்.

மேல்முறையீடு
மேலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் சுதா கூறியுள்ளார். நீண்ட நாட்கள் விசாரணையில் இருந்த இந்த வழக்கில் சுதாவிற்கு சாதகமாக தீர்ப்பு இருக்கும் என்ற நிலையில் இருவர் விடுதலை செய்யப்பட்டிருப்பது சுதா தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்கே நகர் வேட்பாளர்
இந்த சுதா விஜயன்தான் அதிமுக சசிகலா கோஷ்டியின் ஆர்கே நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்தவர். ஆனால் திடீரென தினகரன் தம்மையே வேட்பாளராக அறிவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications