மாந்தோப்பில் புகுந்த கரடியை பிடிக்க வனத்துறையினர் பல மணிநேரம் போராட்டம்
நெல்லை: நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடியை விரட்ட வனத்துறையினர் பல மணிநேரமாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரத்தில் உள்ளது மணிமுத்தாறு அணை. இங்குள்ள வனத்துறை அலுவலகம் அருகே உள்ள மீன்பண்ணை ஒன்றில் நேற்று முன்தினம் கரடி ஒன்றை ஊர்மக்கள் பார்த்துள்ளனர். இதனால் பீதியடைந்த ஊர்மக்கள் திரண்டு கரடியை தேடியபோது கரடி அங்குள்ள மாந்தோப்பின் மரத்தின் மீது அமர்ந்திருப்பதை கண்டனர். உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த 15 பேர் கொண்ட வனத்துறையினர் கரடியை விரட்ட முயற்சி மேற்கொண்டனர். ஆனால் கரடி மரத்திற்கு மரம் தாவியதால் அதை விரட்ட முடியாமல் வனத்துறையினர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து தீப்பந்தம் ஏந்தியும் டயரை கொளுத்தியும் மரத்தின் மீது தண்ணீரை பீய்ச்சியும் அடித்தனர்.
மரத்தின் கீழ் நெருப்பை மூட்டினார். 7 மணிநேரத்திற்கு மேலாக கரடியை விரட்டும் எந்த முயற்சியும் எடுபடவில்லை. இதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுவரை மணிமுத்தாறு ஊருக்குள் 3 முறை கரடி புகுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications