டூட்டி நேரத்தில் பூ வைக்க, நகை அணிய பெண் போலீசுக்குத் தடை!
சென்னை: காக்கி சீருடையில் இருக்கும் பெண் காவலர்கள் தலையில் பூ வைப்பதற்கும், நகைகள் போடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் முதலமைச்சரும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். அவரது பாதுகாப்பு பணிக்காக ஏராளமான பெண் காவலர்கள் காக்கி சீருடையுடன் கமிஷனர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டனர்.
அவர்களில் சிலர் தலையில் பூ வைத்திருந்தனர்.
மேலும் 2 பெண் காவலர்கள் தலையில் அணிய வேண்டிய தொப்பியை மடக்கி, கைகளில் வைத்திருந்தனர். அவர்களுக்கும் கண்டிப்பான அறிவுரை வழங்கப்பட்டது.
அவர்களைப் பார்த்த, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், காக்கி சீருடையில் பெண் காவலர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
''தலையில் பூ வைக்கக்கூடாது. தலை முடியை வலை கொண்டை போட்டுக்கொள்ள வேண்டும். சீருடையுடன் பணியில் இருக்கும்போது, கண்டிப்பாக தொப்பி அணிய வேண்டும்'' என கண்டிப்போடு கூறினார்.
மேலும், ''அதிக அளவில் நகைகள் அணிய கூடாது. குறிப்பாக காதில் தொங்கட்டான் போன்ற நகை போடக்கூடாது. காலில் ஷு அணிய வேண்டும்.
ஜாக்கெட் பட்டனை போர்த்தி போட்டிருக்க வேண்டும். சீருடை இல்லாமல், சாதாரண உடை பணியில் இருக்கும்போது, இந்த விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை'' போன்ற நிபந்தனைகளும் பெண் காவலர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications