மயிலாடுதுறையில் 'அழகுப்போட்டி'. . நடிகை யாஷிகா ஆனந்த் தொடங்கி வைத்தார். . போலீசாரும் கம்பீர நடை
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன் முதலாக அழகுப்போட்டி நடந்தது. இந்த போட்டியை நடிகை யாஷிகா ஆனந்த் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் சிறுமியர் முதல் திருமணமான பெண்கள் வரை பலர் கலந்துகொண்டனர்.
Recommended Video
விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில்களை முதனமையாக கொண்ட மயிலாடுதுறை மாவட்டத்தில், ஒரு தனியார் அமைப்பு சார்பில் அழகுப்போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி மயிலாடுதுறையின் செம்பனார் கோவிலில் அழகுப்போட்டி நடந்தது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் நடிகை யாஷிகா ஆனந்த் தான் இந்த அழகுப்போட்டியை தொடங்கி வைத்தார்.

நடிகை யாஷிகா ஆனந்த்
முதன் முதலாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த இந்த போட்டியை சிறப்பு அழைப்பாளரான யாஷிகா ஆனந்த் தொடங்கி வைத்தார். இந்த போட்டியை ஏராளமானோர் கண்டுகளித்தனர். இந்த போட்டியானது குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள், இளைஞர்கள், திருமணமானவர்கள் என 4 பிரிவுகளாக நடந்தது. இதில் ஆர்வமுடன் ஏராளமான பெண்கள், குழந்தைகள் சிறுவர்கள் கலந்துகொண்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்தனர்.

ஒய்யார நடையில். .
குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகள் தங்களுக்கே உரித்தான ஸ்டைலான நடைகளுடனும், பல வண்ணத்தில், விதவிதமான ஆடைகளை அணிந்தபடி ஒய்யாரமாக வந்து போஸ் கொடுத்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பலர் கை தட்டி ஆரவாரம் செய்தனர். இதேபோல் இளைஞர்கள் மற்றும் திருமணமான பெண்களின் ஒய்யார நடையும் பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த போட்டியின் காரணமாக அங்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சிங்கம் படத்தின் பின்னனி இசையில் போலீசார்
நிகழ்ச்சியின்போது, அங்கு காவல் பணியில் நின்றுகொண்டிருந்த போலீசாரையும் சக போட்டியாளர்கள் மேடைக்கு வருமாறு வற்புறுத்தினர். இதையடுத்து சக போட்டியாளர்களின் வற்புறுத்தலால் போலீசாரும் ஒய்யாரமாக நடந்து வந்தனர். அப்போது அவர்கள் வருகையின்போது நடிகர் சூர்யா நடித்த சிங்கம் படத்தின் பின்னணி இசை போடப்பட்டது. இந்த இசைக்கு ஏற்ப போலீசார் கம்பீரமாக நடந்து வந்ததது பார்வையாளகளுக்கு பூரிப்பை ஏற்படுத்தியது.

கவனத்தை ஈர்த்த 6 வயது சிறுவன்
இதேபோல் கோர்ட் சூட் அணிந்தபடி ஸ்டைலாக வந்த 6 வயது சிறுவனின் நடை அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. ஸ்டைலாக நடந்து வந்த அந்த சிறுவனக்கு பலர் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மிஸ் இந்தியா, மிஸ் வேர்ல்டு என பல அழகி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், மயிலாடுதுறையில் நடத்தப்பட்ட இந்த அழகுப்போட்டி பல்வேறு தரப்பினரின் பாராட்டையும் பெற்றது. குறிப்பாக கிராமப்புற மக்கள் கலந்துகொள்ளும் வகையில் நடந்த இந்த போட்டி பலராலும் பாராட்டப்பட்டது.












Click it and Unblock the Notifications