பள்ளிச் சிறுமியை சீரழித்த அழகு நிலைய கும்பல்: தாய், மகள் ஆண் நண்பர்கள் 2 பேர் கைது: 2 பேர் தலைமறைவு

Subscribe to Oneindia Tamil

காரைக்குடியில் தாயை இழந்த சிறுமி பாட்டியின் பராமரிப்பில் வளர அவரது பள்ளித்தோழி, தோழியின் தாய் உள்ளிட்ட 6 பேர் அவரது அறியாமையைப் பயன்படுத்து மதுபோதைக்கு ஆளாக்கி சீரழித்துள்ளனர். தந்தையின் புகாரின்பேரில் சிறுமியின் பள்ளித்தோழி, அவரது தாயார், தாயாரின் ஆண் நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இரண்டு பேர் தலைமறைவாகிவிட்டனர். அனைவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீஸார் தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர்.

 பரிதாப தந்தை, தாயை இழந்த சிறுமி

பரிதாப தந்தை, தாயை இழந்த சிறுமி

காரைக்குடி காந்திபுரத்தில் வசிப்பவர் இம்ரான் (43) ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) . தனியார் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும் 2 பெண் குழந்தைகளும் இருந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் நோய்வாய்ப்பட்டு மனைவி இறந்து போனார். பின்னர் கடந்த ஆண்டு அவருடைய மூத்த மகளும் நோய்வாய்ப்பட்டு இறந்த நிலையில் 17 வயதான இளைய மகளை தனது மனைவியின் தாயார் வீட்டில் விட்டு படிக்க வைத்திருந்தார்.

தந்தை பாட்டியின் பராமரிப்பில்

தந்தை பாட்டியின் பராமரிப்பில்

வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியே செல்ல சொல்லும் காரணத்தால் மகளை கவனிக்க முடியாது என்பதற்காக மாமியார் வீட்டில் விட்டு வைத்திருந்தார் அங்கிருந்து மகள் அருகில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வரும் நிலையில் சிறுமி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். தினமும் காலையில் இம்ரான் தனது இருசக்கர வாகனத்திலேயே மகளை பள்ளியில் கொண்டு விட்டுவருவார்.

 பள்ளி முதல்வரிடம் வசமாக சிக்கிய சிறுமி

பள்ளி முதல்வரிடம் வசமாக சிக்கிய சிறுமி

இந்நிலையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி அவரது மகள் படிக்கும் பள்ளியில் இருந்து இம்ரானுக்கு அழைப்பு வந்துள்ளது உடனடியாக அவர் புறப்பட்டு பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு வெளியில் நின்றிருந்த தனது மகளுடன் அவர் படிக்கும் பள்ளியின் முதல்வரை சென்று பார்த்துள்ளார். அப்போது பள்ளி முதல்வர் இம்ரானிடம் உங்கள் மகளுக்கு என்ன பிரச்சினை ஏன் பள்ளிக்கு சரிவர வருவதில்லை. இன்றுக்கூட யூனிஃபார்ம் போட்டு புத்தகப்பை எல்லாம் எடுத்து வந்து பள்ளிக்கு வராமல் ஊர்சுற்றிவிட்டு யார் ஒரு பையனுடன் பள்ளி விடும் நேரத்தில் வாசலில் வந்து இறங்குகிறாள். என்னதான் உங்கள் மகளை கவனிக்கிறீர்கள். காலம் கெட்டுக்கிடக்கிறது என்னவென்று விசாரியுங்கள் என்று கடிந்து அனுப்பியுள்ளார்.

மகள் பள்ளிக்குச் செல்லாமல் யாரோ ஒரு இளைஞனுடன் ஊர்ச்சுற்றிவிட்டு வருவதாக பிரின்சிபள் சொன்னதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த இம்ரான் இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் மேடம் என்று சொல்லிவிட்டு மகளை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

 தந்தையின் தலையில் இடி விழுந்த சேதி

தந்தையின் தலையில் இடி விழுந்த சேதி

வீட்டில் தன் மகளை அவர் இதுகுறித்து கேட்டு கண்டித்த போது மகள் கூறிய தகவல் இம்ரானை மயக்கம் போட்டு கொள்ளும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. எந்த தகப்பனும் கேட்க கூடாத ஒன்றை தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றை அவரது மகள் அவரிடம் தெரிவித்தார். இம்ரான் தனது மகனை கவனிக்க இயலாத நிலையில் மாமியார் வீட்டில் விட்டதால் மாமியார் வயதானவர் என்பதை அனுகூலமாக எடுத்துக்கொண்டு அந்த 17 வயது சிறுமி அவருடைய பெண் தோழியுடன் அடிக்கடி வெளியில் சுற்றி உள்ளார்.

 பள்ளிக்கு கட் அடித்து தோழியுடன் சுற்றிய சிறுமி

பள்ளிக்கு கட் அடித்து தோழியுடன் சுற்றிய சிறுமி

சமீபத்தில் பள்ளி திறந்த பொழுது பெண் தோழியுடன் வெளியில் சென்ற அந்த சிறுமி தனது பள்ளித் தோழியின் நண்பர்களால் சீரழிக்கப்பட்டு உள்ளார் என்கிற அதிர்ச்சித் தகவலை கேள்விப்பட்ட அவர் இடிந்து போய் அமர்ந்துவிட்டார். ஆரம்பத்தில் கொரோனா பரவல் இருக்கிறது ஆதலால் பள்ளிகள் மூடி இருந்த நிலையில் இம்ரானின் மகள் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் வகுப்புகளை படித்து வந்துள்ளார். அதன் பின்னர் பள்ளி திறந்த பின்னர் தோழிகளுடன் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

 தோழியின் பிறந்த நாள் மதுவிருந்து

தோழியின் பிறந்த நாள் மதுவிருந்து

கடந்த ஜூலை மாதம் தனது நெருங்கிய தோழிக்கு பிறந்தநாள் என்பதால் பள்ளிக்கு செல்லாமல் அந்த தோழியுடன் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தோழியின் காதலன் ஹரிஷ்(30) என்பவர் இருந்துள்ளார் அவரை இம்ரானின் மகளுக்கு தோழி அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். பின்னர் பிறந்தநாளை கொண்டாடலாம் என்று ஓட்கா என்னும் மதுவை ஹரிஷ் வாங்கி வந்துள்ளார். மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது வீட்டுக்கு வந்த தோழியின் தாயார் லட்சுமியை பார்த்ததும் மதுக்கோப்பைகள் வைத்திருந்த சிறுமி பயந்துபோனார்.

 வாழ்க்கையை சீரழிக்க காரணமான சக தோழி

வாழ்க்கையை சீரழிக்க காரணமான சக தோழி

ஆனால் தோழியின் தாயார் லட்சுமி (38) சிரித்தப்படி பயப்பாடாதே எஞ்ஜாய் பன்னு என்று கூறியுள்ளார். லட்சுமி அருகிலுள்ள பியூட்டி பார்லரில் பணியாற்றுகிறார். அவர் இம்ரானின் மகளைப் பார்த்து அழகாக இருக்கிறாய் உன்னுடைய புருவத்தை லேசாக ட்ரிம் செய்தால் இன்னும் அழகாக இருப்பாய் என்று ஆசைவார்த்தை கூறி உள்ளார் இதன்படியே இவர்களுடைய நட்பு தொடர்ந்துள்ளது. அடிக்கடி தோழியின் வீட்டுக்கு இம்ரானின் மகள் சென்று வந்துள்ளார்.

 மது ஊற்றி வாழ்க்கையை சீரழித்த தோழி கடந்த மாதம் பத்தாம் தேதி மாலை ஐந்தரை மணி அளவில் இம்ரானின் மகளை அவருடைய தோழியும், தோழியின் தாயார் லட்சுமியும் அவருடைய இரு சக்கர வாகனத்தில் பியூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்றுள்ளார். பியூட்டி பார்லரில் சிறுமிக்கு ஐ ப்ரோ ட்ரிம் செய்துள்ளார் அப்பொழுது அந்த அழகு நிலையத்தின் பொறுப்பாளர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மன்சில்( 35) என்பவர் சிறுமிக்கு பழக்கம் ஆகி உள்ளார் இருவரும் போன் நம்பரை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மது ஊற்றி வாழ்க்கையை சீரழித்த தோழி கடந்த மாதம் பத்தாம் தேதி மாலை ஐந்தரை மணி அளவில் இம்ரானின் மகளை அவருடைய தோழியும், தோழியின் தாயார் லட்சுமியும் அவருடைய இரு சக்கர வாகனத்தில் பியூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்றுள்ளார். பியூட்டி பார்லரில் சிறுமிக்கு ஐ ப்ரோ ட்ரிம் செய்துள்ளார் அப்பொழுது அந்த அழகு நிலையத்தின் பொறுப்பாளர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மன்சில்( 35) என்பவர் சிறுமிக்கு பழக்கம் ஆகி உள்ளார் இருவரும் போன் நம்பரை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கடந்த மாதம் பத்தாம் தேதி மாலை ஐந்தரை மணி அளவில் இம்ரானின் மகளை அவருடைய தோழியும், தோழியின் தாயார் லட்சுமியும் அவருடைய இரு சக்கர வாகனத்தில் பியூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்றுள்ளார். பியூட்டி பார்லரில் சிறுமிக்கு ஐ ப்ரோ ட்ரிம் செய்துள்ளார் அப்பொழுது அந்த அழகு நிலையத்தின் பொறுப்பாளர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மன்சில்( 35) என்பவர் சிறுமிக்கு பழக்கம் ஆகி உள்ளார் இருவரும் போன் நம்பரை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

 சீரழித்த பியூட்டி பார்லர் பொறுப்பாளர் மன்சில்

சீரழித்த பியூட்டி பார்லர் பொறுப்பாளர் மன்சில்

இதனிடையே ஆயுதபூஜை விடுமுறை வந்த நிலையில் கடந்த மாதம் 15ஆம் தேதி தோழியின் வீட்டிற்கு இம்ரானின் மகள் சென்றுள்ளார் அங்கு மதிய சாப்பாடு சாப்பிட்ட பின் தோழியும் இம்ரானின் மகளும் பேசிக்கொண்டிருந்துள்ளனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த மன்சில் அந்த சிறுமியை தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து தனது தோழியிடம் சிறுமி தெரிவித்துள்ளார் இதெல்லாம் சகஜம் கண்டு கொள்ளாதே என்று தோழி தெரிவித்துள்ளார்.

 கூட்டாக நைட் ஷோ மது அருந்தி குத்தாட்டம்

கூட்டாக நைட் ஷோ மது அருந்தி குத்தாட்டம்

அதன்பின்னர் அவர்களுடைய பழக்கம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 20 ஆம் தேதி படிப்பதாக சொல்லிவிட்டு பள்ளி தோழியின் வீட்டுக்கு சிறுமி சென்றுள்ளார். தோழியின் வீட்டில் அவரது அம்மா லட்சுமி, மன்சில், விக்னேஷ், சிரஞ்சீவி உள்ளிட்டோர் இருந்துள்ளனர். பின்னர் அனைவரும் சேர்ந்து காரைக்குடியில் உள்ள சினிமா தியேட்டரில் நைட்ஷோ படம் பார்த்துள்ளனர். படம் பார்த்துவிட்டு அங்கேயே குத்தாட்டம் போட்டு உள்ளனர். அதை மன்சில் வீடியோவாக எடுத்துள்ளார்.

 தந்தையை ஏமாற்றிவிவிட்டு பள்ளிக்கு கட் அடித்த சிறுமி

தந்தையை ஏமாற்றிவிவிட்டு பள்ளிக்கு கட் அடித்த சிறுமி

அதன்பின்னர் சம்பவம் நடந்த கடந்த மாதம் 23 ஆம் தேதி சனிக்கிழமை அன்று இம்ரான் வழக்கம்போல் தனது மகளை பள்ளியில் தனது இருசக்கர வாகனத்தில் இறக்கிவிட்டு விட்டு சென்றுள்ளார். அவர் சென்றவுடன் பள்ளிக்குச் செல்லாமல் நெருங்கிய தோழியின் வீட்டிற்கு சென்ற மாணவி அங்கிருந்த லட்சுமி, மன்சில், விக்னேஷ், சிரஞ்சீவி, ஹரீஸ் உள்ளிட்ட அனைவரும் இருந்துள்ளனர். அப்போதும் மன்சில் மாணவியை கட்டாயப்படுத்தி உறவுக்கொண்டுள்ளார். இதற்கு அனைவரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

 பலாத்காரம் தோழி தோழியின் தாயும் உடந்தை

பலாத்காரம் தோழி தோழியின் தாயும் உடந்தை

அதன்பின்னர் விக்னேஷ் அவருடன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதற்கு சிறுமி மறுக்கவே, சிறிது நேரம் கழித்து அவரை தனது இருசக்கர வாகனத்திலேயே ஏற்றிச்சென்று பள்ளி வாயிலில் இறக்கி விட்டுள்ளார். இதை பள்ளியின் பி.டி மாஸ்டர் பார்த்துவிட்டு பிரின்சிபளிடம் மாணவியை அழைத்துச் சென்று தகவல் கொடுக்க அவர் சிறுமியின் தந்தை இம்ரானை வரவழைத்து விவரத்தை கூறி உள்ளார். மேற்கண்ட தகவலை சிறுமி சொன்னபோது அதிர்ச்சி அடைந்த இம்ரான் மகளை அழைத்துக்கொண்டு காரைக்குடி டிஎஸ்பி வினோஜிடம் புகார் அளிக்க அவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகாரை மாற்றியுள்ளார்.

 போக்சோ சட்டத்தில் வழக்கு 4 பேர் கைது 2 பேர் தலைமறைவு

போக்சோ சட்டத்தில் வழக்கு 4 பேர் கைது 2 பேர் தலைமறைவு

புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை சிறுமியின் தோழி, அவரது தாய் லட்சுமி, ஹரிஷ், மன்சில், விக்னேஷ், சிரஞ்சீவி உள்ளிட்டோர் தவறாக பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தோழி, அவரது தாயார் லட்சுமி, விக்னேஷ், சிரஞ்சீவி உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அனைவர் மீதும் போக்சோ சட்டம் பிரிவு 5(1), 6, 17 மற்றும் பெண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஹரிஷ் மற்றும் மன்சில் தப்பி ஓடிவிட்டனர் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 போனில் இருந்த திடுக்கிடும் வீடியோக்கள்

போனில் இருந்த திடுக்கிடும் வீடியோக்கள்

கைது செய்யப்பட்டவர்கள் செல்போன்களை ஆய்வு செய்தபோது இதுபோன்ற பல வீடியோக்கள், குத்தாட்ட வீடியோக்கள் இருப்பதை போலீஸார் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இம்ரானின் மகள் போல் பலரை லட்சுமி அவரது பியூட்டீஷியன் தொடர்பை பயன்படுத்தி சீரழித்திருக்கலாம், அதேபோல் சிறுமியின் தோழியும் சிறுமியைப்போலவே எத்தனைப்பேரை இவ்வாறு அழைத்து வந்தாரோ என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

 விலகாத மர்மங்கள்

விலகாத மர்மங்கள்

அப்பாவி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை குறிவைத்து இந்தக்கும்பல் இயங்கியிருக்கலாம், இவர்களுக்கு வேறு ஏதேனும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய ஹரீஸ் சென்னையைச் சேர்ந்தவர். இவருக்கு சென்னையில் உள்ள தொடர்புகள் இவரது பங்கு குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான மன்சிலையும் பிடித்தால் பல விஷயங்கள் வெளியில் வரும் என்று கூறப்படுகிறது.

 போக்சோ சட்டம் வந்தாலும் அடங்காத சமூக விரோதிகள்

போக்சோ சட்டம் வந்தாலும் அடங்காத சமூக விரோதிகள்

என்னதான் போக்சோ சட்டம் வந்தாலும், சமீபத்தில் கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரால் சிறுமி தற்கொலைச் செய்துகொண்டார். நேற்று கரூரில் சிறுமி ஒருவர் தான் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தற்போது காரைக்குடியில் மாணவி பியூட்டி பார்லர் கும்பலால் சீரழிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் 17 வயது சிறுமிகளே. பெற்றோர் கவனிப்பில்லாத பள்ளி குழந்தைகள், பயப்படும் பள்ளி குழந்தைகள், செல்போன் மூலம் தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் சிறுமிகளை பழக்குவது என சமூக விரோதிகளின் செயல் தொடரத்தான் செய்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+