சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்: ஜெ. அறிவிப்பு
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டசபைக்கு இந்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. யார் எந்த கட்சியுடன் கூட்டணி சேர உள்ளார். மொத்தம் எத்தனை அணிகள் அமைய உள்ளன என்பன உள்ளிட்ட விவரங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை இருந்த போதிலும் ஆளும் கட்சி இப்போதே தேர்தல் பணிகளில் வேகம் காட்டத் துவங்கிவிட்டது.

அதன்படி எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஜெயலலிதா, தேர்தல் பணிகளை உடனே தொடங்கும்படி வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், தற்போது தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஜனவரி 20ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை தலைமைக் கழகத்தில் உரிய கட்டணம் செலுத்தி விருப்ப மனு அளிக்கலாம் என்று கூறியுள்ளார்.
தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனு கட்டணமாக 11000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுவைக்கு 5000 ரூபாயும், கேரளாவிற்கு 2000 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications