தமிழகத்திலும் பாரத் பந்த்.. அடைக்கப்பட்ட கடைகள், இயங்கிய பஸ்கள்.. எதிர்க்கட்சிகள் போராட்டம்!
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக தமிழகத்திலும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
Recommended Video

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக தமிழகத்திலும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பெரிய அளவில் இது பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்ற போதிலும் ஆங்காங்கே எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன.
திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றது. இந்தப் போராட்டம் தமிழக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை
அதேசமயம், ஆங்காங்கே பெரிய அளவில் போராட்டங்கள் நடந்துள்ளன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பல ஊர்களில் வர்த்தக நிறுவனங்கள் செயல்படவில்லை. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதேசமயம், அரசு பஸ்கள் வழக்கம் போல ஓடியது

தமிழகத்தில் எப்படி
வணிகர் சங்கங்கள் அனைத்தும் போராட்டத்தில் பங்கேற்றது. இதனால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டது. பெரும்பாலான காய்கறிச் சந்தைகள் இயங்கவில்லை. கிட்டத்தட்ட 65 லட்சம் கடைகள் இயங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பேருந்துகளின் நிலை
இந்த போராட்டத்திற்கு ஆளும் அதிமுக ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் தமிழகத்தில் அரசு பஸ்கள் மட்டும் ஓடியது. அதேபோல் அரசு அலுவலங்கள் செயல்பட்டன. அரசு சம்பந்தமான எந்தப் பணிகளும் பாதிக்கப்படவில்லை.

பாதுகாப்பு அதிகரிப்பு
அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க அரசு உத்தரவு பிறப்பித்தது, பேருந்துகள் பாதுகாப்பாக இயங்கியது. ஆனாலும் ஆங்காங்கே கல்லெறியும் சம்பவம் நடந்தது. சென்னையில் உள்ள அரசு பஸ் டிப்போக்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சென்னையில் 25,000 போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தபட்டனர். தமிழகம் முழுக்க பாதுகாப்பது அதிகரிக்கப்பட்டது.

யார் தலைமை
தமிழகத்தில் போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட 10க்கும் அதிகமான கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. ம.தி.மு.க., இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ, விடுதலை சிறுத்தை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தி.க, பெருந்தலைவர் மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், எஸ்.டி.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் ஆதரவு தந்தது. பாமக வெளியில் இருந்து ஆதரவு தந்தது.

லாரி ஆட்டோ
லாரிகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. அனைத்து ஆட்டோ தொழிலாளர் சங்கங்களும் போராட்டத்தில் குதித்தது. இதனால் ஆட்டோ போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. சரக்கு லாரிகள் முழுமையாக ஓடவில்லை. நாலரை லட்சம் லாரிகளும் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டன ஆர்ப்பாட்டம்
இன்று மாலை 4 மணிக்கு தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.இடதுசாரிகள் சார்பில் காலை 10 மணிக்கு அண்ணா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். மாலை 4 மணிக்கு சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரை அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். இதில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.

மீனவர்கள் வேலை நிறுத்தம்
நீீலகிரி மாவட்டத்தில் பந்த்துக்கு முழு ஆதரவு அளிக்கப்பட்டது.கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தது..கூடலூர், பந்தலூரில் கடைகள் முழுமையாக அடைப்பு நடத்தப்படுகிறது. அதேபோல் கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications