ஈழத்தமிழ் மண்ணில் புழு கூட புலியானது: யாழ்ப்பாணத்தில் பாரதிராஜா பேச்சு
யாழ்ப்பாணம்: புழு கூட புலியாக ஆன இந்த ஈழத் தமிழ் மண்ணில் என் பாதம் படுகையில் தமிழன் என்பதால் பரசவம் அடைகிறேன் என இயக்குனர் பாரதிராஜா யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா இலங்கை சென்றுள்ளார். அவர் யாழ்ப்பாணத்தில் யாழ். மாவட்ட கலைஞர்களை சந்தித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன், வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பாரதிராஜா பேசுகையில்,

தியாகங்கள்
தமிழர் இனம் உலகமே வியக்கும்படி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. இந்த உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் போதிலும் ஈழத்தில் வாழும் தமிழர்கள் செய்த தியாகங்கள் விடுதலை கோரி அர்ப்பணிப்புடன் நடத்தப்படும் பயணங்கள்.

ஈழத்தமிழ்
புழு கூட புலியாக ஆன இந்த ஈழத் தமிழ் மண்ணில் என் பாதம் படுகையில் தமிழன் என்பதால் பரசவம் அடைகிறேன். உலகத் தமிழர்களுக்கு தமிழர்கள் என்ற அடையாளத்தை தந்தவர்களே ஈழத்தமிழர்கள் தான்.

வேதனை
நீங்கள் கடந்து வந்த பாதை, வாழ்ந்த வாழ்க்கை முறைகளை நினைத்துப் பார்க்கையில் எங்களுக்கு ஏற்படும் இதய வேதனையை யாராலும் எளிதில் மற்ற முடியாது.

எதிர்ப்பு சக்தி
எதிர்ப்பு சக்தியில்லா எந்த உயிரும் இந்த உலகில் வாழ முடியாது என்பது கூர்ப்புக் கொள்கை. புழு பூச்சி கூட எதிர்க்கும் திறனை பெறுகையிலேயே தன் வாழ்வியலைபெறுகிறது. ஈழத்தமிழர்களும் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருந்ததால் தான் தங்களின் வாழ்வியல் உரிமைக்காக யாரையும் எதிர்க்கும் சக்தியாக உருவெடுத்தனர் என்றார் பாரதிராஜா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications