நெல்லையில் நடந்த பேரங்கள், கோவையில் குவிந்த அமைச்சர்கள்: இது தேர்தல் உள்குத்து
சென்னை: உள்ளாட்சி இடைத்தேர்தல் முடியும் வரை உள்காய்ச்சலில் தான் இருப்பார்கள் தமிழக அமைச்சர்கள் அந்த அளவிற்கு இடைத்தேர்தல் ஜுரம் அனலாய் தகிக்கிறது கூல் நகரமான கோவையில்.
நெல்லையில் தொல்லையின்றி அதிமுக வெற்றி பெற்று மேயர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டது. ஆனால் இந்த வெற்றிக்குப் பின்னால் நடைபெற்ற பேரங்கள்... காய் நகர்த்தல்கள் என அனைத்தும் சாமர்த்தியமாக முடிந்து கடைசியில் எதிரிகள் இல்லாத போர்களத்தில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் அ.தி.மு.க வேட்பளர் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பது பல இடங்களில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

களத்தில் பாஜக
உள்ளாட்சிப் பதவிகளில் காலியாக இருக்கும் பொறுப்புக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துவிட்டன. தேர்தலில் போட்டியிடுவது இல்லை என முடிவுசெய்த தே.மு.தி.க, ம.தி.மு.க, பா.ம.க ஆகியவை பி.ஜே.பி-க்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன.

புவனேஸ்வரி – வெள்ளையம்மாள்
இந்த நிலையில், அ.தி.மு.க சார்பில் மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளரான புவனேஸ்வரியை களம் இறங்கினார். பி.ஜே.பி சார்பில் வெள்ளையம்மாள் என்பவர் பெயர் அறிவிக்கப்பட்டது. இதுதவிர, இந்திய தேசிய லீக், இந்து மக்கள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, சுயேச்சைகள் என மொத்தம் 10 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனுக்கள் நிராகரிப்பு
இவற்றில் அ.தி.மு.க மற்றும் பி.ஜே.பி-யை தவிர ஏனைய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுதான் புகைச்சலை கிளப்பியுள்ளது. ஆளுங்கட்சியில் இருந்து பேரம் பேசினார்கள் என்று பகிரங்கமாக புகார் கூறுகிறார் இந்து மக்கள் கட்சியின் வேட்பாளரான பாப்பா.

ஆளுங்கட்சிக்கு துணை
பண பேரத்திற்கு மசியவில்லை என்பதால் எங்களைப் போட்டியில் இருந்து விலக்கும் முயற்சியாக அதிகாரிகளின் துணையுடன் எங்களின் வேட்புமனுவில் தவறு இருப்பதாகக் காரணம் சொல்லி நிராகரிக்க வைத்துள்ளனர் என்கிறார் அவர்.

எதிரியே இல்லாத களத்தில்
வேட்புமனு நிராகரிக்கப்பட்ட சிலர், ''எதிரியே இல்லாத போட்டிக்கு அ.தி.மு.க திட்டமிட்டுவிட்டது. ஏற்கெனவே எங்களை போட்டியிடக் கூடாதுன்னு அன்பாக மிரட்டல் விட்டுப் பார்த்தாங்க. அதற்கு சம்மதிக்காததால் இப்போது அதிகாரிகளை ஏவி எங்கள் மனுக்களை நிராகரிக்க வெச்சுட்டாங்க.'' என்றும் பொங்குகின்றனர்.

பாகம் சரியில்லையாமே?
தள்ளுபடி செய்யப்பட்ட அனைத்து மனுக்களுக்கும், 'பாகம் எண் சரிவர எழுதப்படவில்லை' என்றே காரணம் சொல்லப்பட்டுள்ளது.
பொதுவாக, வேட்புமனுவில் போட்டியிட விரும்புபவர் மற்றும் அவருக்கு முன் மொழிபவர்களின் பெயர், வரிசை எண், பாகம் எண் போன்றவை சரியாகக் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். அதில் தவறு இருக்கும் பட்சத்தில் அந்த மனுக்களை நிராகரிக்க தேர்தல் அதிகாரிக்கு உரிமை இருக்கிறது என்கிறார் மாநகராட்சி ஆணையாளரும் தேர்தல் அதிகாரியுமான லட்சுமி.

வெளியேறிய வெள்ளையம்மாள்
இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி பி.ஜே.பி வேட்பாளரும் சில சொந்தப் பிரச்சினைகளால் மனுவை வாபஸ் வாங்கவே அ.தி.மு.க வேட்பாளர் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

நீதிமன்றம் போன சுயேட்சை
திருநெல்வேலி மாநகர மேயராக புவனேஸ்வரி போட்டியின்றித் தேர்வானதாக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேயர் பதவிக்கான தேர்தலில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்த சையது அலி பாத்திமா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தூத்துக்குடி தில் ஜெயலட்சுமி
அதே சமயம் தூத்துக்குடி மேயர் தேர்தலில் அதிமுகவின் அந்தோனி கிரேசிக்கு சரியான போட்டி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி. ஆளுங்கட்சியின் அன்பான பேரம், சமரசம், அதட்டல், உருட்டல், மிரட்டல் எதற்கும் அஞ்சாமல் பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி தில்லாக பிரச்சாரம் செய்து வருகிறார். அமைச்சர் சண்முகநாதன் கொடுக்கும் குடைச்சல் சரியாக சமாளிக்கிறார் வேட்பாளர் ஜெயலட்சுமி என்கின்றனர் பாஜகவினர்.

கோவையில் மல்லுக்கட்டு
ஆயிரத்துக்கும் அதிகமான உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆனால், கோவையில் மட்டும்தான் இடைத்தேர்தல் நடக்கிறதோ என சந்தேகப்படும் அளவுக்கு கோவையில் அனலடிக்கிறது. அ.தி.மு.க. சார்பில் கட்சியின் மாநகர மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், பி.ஜே.பி சார்பில், மாவட்டத் தலைவர் நந்தகுமார், மார்க்சிஸ்ட் சார்பில் முன்னாள் மண்டலத் தலைவர் பத்மநாபன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

16 அமைச்சர்கள்
''கோவை மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க வெல்வது நிச்சயம். ஆனால் வாக்கு வித்தியாசம்தான் பெரிய அளவில் இருக்காது. கடந்த நாடாளுமன்ற தேர்தலைப்போலவே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லலாம்'' என உளவுத்துறை ரிப்போர்ட் சொல்லவே அங்கு 16 அமைச்சர்களை களம் இறக்கியுள்ளது அதிமுக.

ஆளுங்கட்சியின் நம்பிக்கை
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் பணத்தை வாரி இறைக்கத் தொடங்கியுள்ளனர் அமைச்சர்கள்.ஆனால், மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கிற கட்சியே இடைத்தேர்தலில் வெற்றி பெறும் எனும் கடந்த கால அனுபவங்களில் நம்பிக்கையுடன் இருக்கிறது அ.தி.மு.க. ஆனாலும் கோவை அதிமுகவில் நிலவும் உள்குத்து உள்ளாட்சித் தேர்தலை பதம் பார்த்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

அம்மா கவனிக்கிறாங்கப்பா
எனவேதான் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அத்தனை கவுன்சிலர்களும் சரியா வேலை செய்யணும். யாரும் நடிக்காதீங்க. பெட்டிஷன் போடறது எல்லாத்தையும் நிறுத்தி வெச்சுட்டு, தேர்தல் வேலைகளை மட்டும் கவனியுங்க. உங்களை கவுன்சிலர் ஆக்கின கட்சியை ஜெயிக்க வைங்க'' என பேசியுள்ளாராம்.

குன்னூர் குபீர்!
குன்னூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் சரவணக்குமார். மொத்தம் 7 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனையின்போது, அனைவரின் மனுக்களும் தள்ளுபடியான அதிசயம் நடந்தது. வெல்வது சிரமம்தான் என்ற பட்டியலில் இருந்த குன்னூர் நகராட்சியில் போட்டியே இல்லாமல் அ.தி.மு.க.வென்று விட்டது

களமிறங்கும் முதல்வர்
எனினும் தூத்துக்குடி, கோவை ஆகிய இரண்டு மாநராட்சிக்கான மேயர் பதவிகளையும் மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று ஆளுங்கட்சி முழு வீச்சில் இறங்கியுள்ளது. அமைச்சர்கள், தொண்டர்கள் களமிறங்கினாலும் கட்சித்தலைவி என்ற முறையில் முதல்வர் ஜெயலலிதா தூத்துக்குடியிலும், கோவையிலும் பிரசாரம் செய்யப் போகிறார். பார்க்கலாம் வெல்லப்போவது மாநில ஆளும் கட்சியா? மத்தியில் ஆளும் கட்சியா?
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications