போனது டிரிபிள்ஸ்.. மோதியது டிஜிபி கார் மீது.. சும்மா விடுமா போலீஸ்!
சென்னை: டூவீலர் என்றால் இரண்டு பேர் மட்டும்தான் போக வேண்டும். ஆனால் நம்ம ஊரில்தான் நாலு பேர், ஐந்து பேர் வரை கூட போய் அலறடிப்பார்கள், அதில் உள்ள விபரீதம் தெரியாமல். இப்படித்தான் சென்னையில் 3 என்ஜீனியர்கள் படு வேகமாக டிரிபிள்ஸ் ஓட்டி டிஜிபி கார் மீதே மோதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த வெங்கடேசன், செந்தில் ஆகியோர் என்ஜீனியர்கள். அதேபோல இவர்களது நண்பர் சக்திவேல். இவரும் என்ஜீனியர்தான். மூன்று பேரும் இணைந்து கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆலப்பாக்கத்தில் ஒரு பள்ளிக் கூட கட்டட கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இரவில் பணி முடித்து விட்டு மூன்று பேரும் ஒரே பைக்கில் கிளம்பியுள்ளனர். பெருங்களத்தூர் அருகே வந்தபோது முன்னால் போய்க் கொண்டிருந்த காரை ஓவர் டேக் செய்வதற்காக படுவேகமாக போயுள்ளனர். அப்போது திடீரென எதிரே வாட்டர் டேங்கர் டிராக்டர் வந்து விட்டது. இதனால் நிலை குலைந்த பைக், இடது புறமாக திரும்பியபோது கார் மீது மோதியது.
அந்தக் காரில் பயணித்தவர் தமிழக டிஜிபி ராஜேந்திரன். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர் ஆபத்து இல்லை. டிஜிபி காயமின்றி தப்பினார். ஆனால் பைக்கில் போன 3 பேருக்கும் காலில் முறிவு ஏற்பட்டது. அவர்களை போலீஸார் மீட்டு குரோம்பேட்டையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தவறான பாதையில் வந்த டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications