முதல்வர் வீட்டுக்கு அருகிலேயே பைக் ரேஸ் நடத்தும் 50 இளைஞர்கள்... காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

முதல்வர் வீட்டுக்கு அருகிலேயே 50 இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்தி வருவதால் காவல் துறை நடவடிக்கை எடுக்குமா என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை அடையாறில் முதல்வர் வீடு அமைந்துள்ள கிரீன்வேஸ் சாலையிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள திருவிக பாலத்தில் 50-க்கும் அதிகமான இளைஞர்கள் இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோ பந்தயம் நடத்தினர்.

இரவில் அதிவேகமாகவும், வீலிங் செய்தபடியும் இரு சக்கர வாகனங்களை இளைஞர்கள் ஓட்டிச் சென்றதால் சாலையில் சென்ற பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

Bike race near CM Edappadi Palanisamys house

இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் விரைந்து வரவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் ரேஸுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

முதல்வர் வீட்டுக்கு அருகிலேயே ரேஸ் நடப்பதாக பலமுறை புகார் அளித்தும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+