ஐயா.. திருடன் உங்க துப்பாக்கியையும் தூக்கிட்டு ஓடிட்டான்யா.. 'கட்'!
புதுச்சேரி: கட்டண பாக்கி வைத்துள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் லேண்ட் லைன் இணைப்புகளை பிஎஸ்என்எல் துண்டித்து வருகிறது.
புதுச்சேரியில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும் லேண்ட் லைன் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

காவல் நிலையங்களுக்கு ஆகும் கட்டண பில் மாதந்தோறும் போலீஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். போலீஸ் தலைமையகம், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு கட்டணத்தை செலுத்துவது வழக்கம்.
ஆனால் கடந்த சில மாதங்களாக புதுச்சேரியின் பல காவல் நிலையங்களில் தொலைபேசி உபயோகத்திற்கான கட்டணத்தை செலுத்தாமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. கட்டண பாக்கி சுமார் 8 ஆயிரம் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பல மாதங்களாக பிஎஸ்என்எல் நினைவூட்டியும் இந்த கட்டண பாக்கி செலுத்தப்படவில்லை. அதையடுத்து, பல போலீஸ் ஸ்டேஷன்களின் லேண்ட் லைன் தொலைபேசி இணைப்பை துண்டிக்கும் பணியில் பி.எஸ்.என்.எல். இறங்கியுள்ளது.
உதாரணத்துக்கு, ஒரு மாதத்திற்கு முன்பே காலாப்பட்டு போலீஸ் ஸ்டேஷனின் தொலைபேசி எண் கடந்த ஒரு மாதங்களாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசாருக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் அது பயன்படாமல் உள்ளது. இதனால் அவசர உதவிகேட்டு போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தலைமை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே புதுச்சேரி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications