ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: ஆசிர்வாதம் ஆச்சாரி அல்லது நடிகர் நெப்போலியனை களம் இறக்குகிறது பா.ஜ.க.?
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் முன்னாள் செயலாளர் ஆசிர்வாதம் ஆச்சாரியை பாரதிய ஜனதா களம் இறக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத்தண்டணை பெற்ற ஜெயலலிதா தமிழக முதல்வர் பதவியுடன் தான் வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். இதனால் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி முதல் ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 13-ந் தேதி நடைபெற உள்ளது. ஆளும் அ.தி.மு.க.சார்பில் வளர்மதி, தி.மு.க. சார்பில் ஆனந்த் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அமித்ஷா ஆலோசனை
இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியும் களம் இறங்குகிறது. சென்னையில் ஆடிட்டர் குருமூர்த்தி இல்ல திருமணத்துக்காக வந்த பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் அமித்ஷா, ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

யார் யாருக்கு வாய்ப்பு?
திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் பார்த்தீபன், மாநில துணைத் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் அல்லது பாரதிய ஜனதாவின் அரசியல் வியூக குழு உறுப்பினரான ஆசிர்வாதம் ஆச்சாரி ஆகியோரில் ஒருவரை களம் இறக்க திட்டமிட்டுள்ளது பாரதிய ஜனதா.

யார் இந்த ஆசிர்வாதம் ஆச்சாரி?
இவர்களில் ஆசிர்வாதம் ஆச்சாரி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் உதவியாளராக இருந்தவர். திருச்சியை சேர்ந்த இவர் மத்திய அரசு பணியில் பல ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்தார். தகவல் தொடர்பு அமைச்சராக ஆ.ராசா இருந்த போது அவருக்கு சீனியர் பி.ஏ.வாகவும் பணியாற்றினார்.

சு.சுவாமி பகீரத முயற்சி
பின்பு மத்திய ரயில்வே அமைச்சகத்தில் பணியாற்றினார். தற்போது அந்த வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு சுப்பிரமணியசாமி வழிகாட்டுதலில் பா.ஜ.க.வின் அரசியல் வியூகம் வகுக்கும் குழு உறுப்பினராக உள்ளார். இவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக சுப்பிரமணியன் சுவாமி முயற்சித்து வருகிறார்.

அரசு தரப்பு சாட்சி
இவர் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் ஆ.ராசா மற்றும் கனிமொழிக்கு ஆகியோருக்கு எதிரான முக்கிய அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

தி.மு.க.வுக்கு செக்
இவரை நிறுத்துவதன் மூலம் தி.மு.க.வுக்கு செக் வைக்க முடியும் என்பது பாரதிய ஜனதாவின் கணக்கு. ஆனால் ஆசிர்வாதம் ஆச்சாரியை களம் இறக்குவதில் தமிழக பாரதிய ஜனதா தலைவர்களுக்கு விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

நெப்போலியனுக்கு வாய்ப்பு?
இதனிடையே பாரதிய ஜனதாவில் அண்மையில் இணைந்த நடிகர் நெப்போலியனை களம் இறக்குவது தொடர்பாகவும் தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. தி.மு.க.வை விட்டு விலகி அண்மையில்தான் பா.ஜ.க.வில் இணைந்தார் நெப்போலியன். அவருக்கு வாய்ப்பளித்தால் தி.மு.க, உள்ளிட்ட கட்சிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், பாரதிய ஜனதாவுக்குப் போனால் தங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்து கட்சி தாவலாம் என்ற மற்றொரு கணக்கும் பாரதிய ஜனதாவுக்கு இருக்கிறதாம்.
இதுதான் பாரதிய ஜனதாவின் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications