தமிழகம்: கருத்து கணிப்பில் 5வது இடத்துக்கு மல்லுகட்டும் பா.ஜ.க.- காங்கிரஸ்
சென்னை: தமிழகத்தில் ஆளும் அதிமுகவும் திமுகவும் சம பலத்துடன் இருப்பதாக பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வுக் குழுவின் கருத்து கணிப்பு கூறியுள்ளது. அதே நேரத்தில் தேசியக் கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் தமிழகத்தில் 5-வது இடத்துக்கு கடுமையாக மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கின்றன.
சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக பேராசிரியர் ராஜநாயகம் குழுவினர் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

இதில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க 37.7% பேரும் அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க 35.7% பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில் தற்போது தேர்தல் வைத்தால் அதிமுகவுக்கு 33.3%; திமுகவுக்கு 33.1%பேரும் வாக்களிப்போம் என்றும் கூறியுள்ளனர்.
இந்த 2 கட்சிகளுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் தேமுதிகவுக்கு 6 %, 4வது இடத்தில் பாமகவுக்கு 3.2% ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
5-வது இடத்துக்குதான் தேசிய கட்சிகளான மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே மல்லுக்கட்டு நடைபெறுகிறது. அதாவது பாஜகவுக்கு 2% பேரும் காங்கிரஸுக்கு 1.8% பேரும் வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.
அதாவது அதிமுக- திமுகவுக்கு இடையேயான ஆதரவு வித்தியாசம்போலவே பாஜக, காங்கிரஸ் இடையேயான ஆதரவு வித்தியாசமும் 0.2% அளவில்தான் இருக்கிறது. இதனால் தேசிய கட்சிகளான பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் தமிழக வாக்காளர்கள் 5-வது இடத்தைத்தான் ஒதுக்கி கொடுத்துள்ளனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications