ஆர்.கே.நகர்... பாஜக முடிவு தெரிய 2 நாளாகும்...!
கோபிச்செட்டிப்பாளையம்: ஆர்.கே.நகரில் போட்டியிடுவதா, இல்லையா என்பது குறித்து இன்னும் 2 நாளில் முடிவு அறிவிக்கப்படும் என்று பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
கோபி வந்த தமிழிசை அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பும் அந்த தொகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து பா.ஜ.க. நாளை அல்லது நாளை மறுநாள் முடிவை அறிவிக்கும்.
தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. இதுவரை 40 லட்சம் உறுப்பினர்களை குறுகிய காலத்தில் சேர்த்துள்ளது. தமிழகத்தில் உள்ள எந்த கட்சியிலும் இப்படி உறுப்பினர்கள் சேர்க்கப்பட வில்லை. 2016 ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு மாற்றாக பாரதீய ஜனதாகட்சி உருவெடுக்கும் என்றார் தமிழிசை.
இடைத்தேர்தலில் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக களத்தில் உள்ளன. திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டன. தேமுதிக மற்றும் பாஜகவின் நிலைப்பாடுதான் பெரும் குழப்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications