ஆர்கே நகரில் நோட்டாவிடம் தோற்றுப்போன பாஜக!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜகவை நோட்டா வீழ்த்தியது.
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தொடக்கம் முதலே பாஜகவுக்குக்கும் நோட்டாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைகள் முடிவில் பாஜகவை விட நோட்டா அதிக வாக்குகளை பெற்றுள்ளது.
ஆர்கே நகர் தொகுதிக்கு ஓராண்டுக்கு பின்னர் பெரும் சர்ச்சைகளுக்கு நடுவே கடந்த வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 77.5 சதவீத வாக்குகள் பதிவானது.

வாக்கு எண்ணிக்கை
இந்த வாக்குகளை எண்ணும் பணி சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்றது. இதில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரனே தொடர்ந்து முன்னிலை வகித்து இறுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

தமிழிசை பிரச்சாரம்
ஆர்கே நகரில் பாஜக சார்பில் கரு நாகராஜன் களமிறங்கினார். அவரை ஆதரித்து பல பகுதிகளில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சூறாவளி பிரச்சாரம் செய்தார்.

பணம்கொடுப்பதாக புகார்
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக கூறி ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார் பேட்டையில் சாலைமறியல் போராட்டமெல்லாம் நடத்தினார். தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் கொடுத்தார்.

பாஜக கடைசி இடத்தில்
இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாஜக மிகக்குறைந்த வாக்குகளை பெற்று கடைசி இடத்தை பிடித்தது பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் 1368 வாக்குகளை பெற்றார்.

பாஜகவை வீழ்த்திய நோட்டா
ஒரு கட்டத்தில் பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. ஆனாலும் பாஜகவை ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று நோட்டா 5வது இடத்தை பிடித்தது. கரு நாகராஜன் 1368 வாக்குகளுடன் கடைசி இடத்தில் உள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications