"அம்மா" கூட்டத்துக்கு 200தான்.. மோடி கூட்டத்துக்கு 300 ரூவா தர்றாங்களாம்...!
சென்னை: நீங்கள் செய்வீர்களா செய்வீர்களா என்று வாய் வலிக்க வலிக்க பேசி வரும் முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்திற்கு ரூ. 200ம், சாப்பாட்டுப் பொட்டலமும் கொடுத்து ஆள் சேர்ப்பது போல பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்துக்கும், பணம் + பார்சல் கொடுத்து கூட்டம் சேர்க்க பாஜக களம் இறங்கியுள்ளதாம்.
பிரதமர் மோடி கூட்டத்திற்கு ஆட்களை திரட்டும்போது தலைக்கு ரூ. 300 கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் உலா வருகின்றன. ஆனால் எதிர்பார்க்கும் அளவுக்கு ஆட்களைத் திரட்ட முடியுமா என்ற சந்தேகமும் பாஜகவுக்கு உள்ளதாம்.
தமிழகத்தில் பெரிய கூட்டணிக்கு பிளான் போட்டு எல்லாமே சொதப்பலாகி கடைசியில் நந்தவனத்தில் ஆண்டி கதையாக ஓரிரு தம்மாத்தூண்டு கட்சிகளை மட்டும் கூட்டு சேர்த்துக் கொண்டு 189 தொகுதிகளில் போட்டியிடுகிறது பாஜக. இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்குள் தாவு தீர்ந்து போனது தனித் கதை.
இப்போது இந்த வேட்பாளர்களை ஆதரித்துப் பேச பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். கன்னியாகுமரி, மதுரை, கோவை உள்பட 5 இடங்களில் பேசவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளில் பாஜக தலைவர்கள் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

பெருஸ்ஸா யாரும் இல்லை
திமுக, அதிமுக, தேமுதிக அளவுக்கு பாஜகவில் பேச்சால் கவரக் கூடிய தலைவர்கள் யாருமே இல்லை. பேசும் தலைவர்களது பேச்சுக்கும் பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் இல்லை. கூட்டமும் சேரவில்லை.

சேம் சைட் கோல் போடும் தலைவர்கள்
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்று ஆரம்பத்தில் கூறியதை அத்தனை எதிர்க்கட்சிகளும் பிடித்துக் கொண்டன. ஆனால் வெங்கையா நாயுடு, நான் பார்த்தேனே என்று சேம் சைட் கோல் போட்டு அந்த பாயிண்ட்டையும் ஒன்றுமில்லாமல் செய்து விட்டார். இப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக பாஜகவினர் பேச பாயிண்ட் கூட இல்லை.

சென்னையில் 6ம் தேதி
இந்த நிலையில்தான் பிரதமர் மோடி வருகிறார். சென்னையில் 6ம் தேதி அவர் பேசுகிறார். இதற்காக கூட்டம் சேர்க்கும் வேலையில் கட்சித் தலைவர்கள் குதித்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கூட்டத்தைக் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்களாம்.

தலைக்கு ரூ. 300
கூட்டத்திற்குக் கூட்டி வரப்படுவோருக்கு தலைக்கு ரூ. 300 பணம் தரப்படுமாம். அது தவிர வாகனம், ஒரு நேர சாப்பாடு, டீ பிஸ்கட் தருவார்களாம். குடிக்கத் தண்ணீர் தருவார்களாம். சரக்கெல்லாம் தர மாட்டார்களாம்.

லட்சம் பேரை கூட்டிக் கொண்டு வரத் திட்டம்
கிட்டத்தட்ட ஒருலட்சம் பேரைக் கூட்டிக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம். ஆனால் அந்த அளவுக்கு கூட்டத்தை பிரசாரக் கூட்டம் நடக்கும் ஒய்எம்சிஏ மைதானம் தாங்குமா என்று தெரியவில்லை.
மைதானத்தை விடுங்க, மக்கள் முதலில் இவர்களைத் "தாங்குவார்களா" என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும்!
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications