அதிமுகவை திட்டமிட்டு சீரழித்து.. கட்சியை பலவீனப்படுத்த முயல்கிறது பாஜக.. தமீமுன் அன்சாரி பேட்டி
மயிலாடுதுறை: பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க.வை திட்டமிட்டு சீரழித்து கட்சியை பலவீனப்படுத்துவதற்கான வேலைகளை செய்து வருவதாக மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி பேட்டியளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள வானதிராஜபுரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி கலந்துகொண்டார். தொடர்ந்து ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முற்றுகையிட்டு போராட்டம்
அண்ணா பிறந்தநாள் விழா வருவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகளை சாதி ,மத ,பேதம் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துகொள்கிறேன். மேலும் இந்த கோரிக்கையை முன்வைத்து செப்டம்பர் 10-ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருக்கிறோம்.

டெல்லி அரசுக்கு பிடிக்கவில்லை
முதலமைச்சரின் அதிகாரத்தை குறைக்க கூடிய வேலைகளை மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது. மேலும் மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க நினைக்கிறது. தமிழக ஆளுநர் தேவையற்ற விஷயங்களை பேசி வருகிறார். ஆளுநர் மற்றும் ரஜினிகாந்த் சந்திப்பில் வெளியில் பேச முடியாத அளவிற்கு என்ன அரசியல் பேசியிருப்பார்கள்... அரசியல் என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும்.. திராவிட இயக்கங்களின் கொள்கைகள் டெல்லி அரசுக்கு பிடிக்கவில்லை.. அதனால் தான் ஆளுநரை வைத்து சிதைக்க நினைக்கிறார்கள்....

வேண்டப்பட்டவர்களுக்காகவே ஏலம்
திராவிட இயக்கங்கள் தான் அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு தமிழ்நாட்டை ஆளும்... திமுக அரசிற்கு ஊறு விளைவிக்கக்கூடிய செயல்களை ஆளுநர் செய்தால் ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி இந்த அரசை பாதுகாக்க கூடிய வேலைகளை செய்வோம். என்று கூறினார். தொடர்ந்து '5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசு நிறுவனமான bsnl ஏன் பங்கேற்கவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த தமீமுன் அன்சாரி, ''ஒன்றிய அரசின் வேண்டப்பட்டவர்களுக்கு எதுவாகவே இந்த ஏலம் நடைபெற்று இருக்கிறது'' என்று குற்றம்சாட்டினார்.

அதிமுகவை பலவீனப்படுத்த
தொடர்ந்து பேசிய தமீமுன் அன்சாரி, தற்போது பாரதிய ஜனதா கட்சி அதிமுகவை திட்டமிட்டு சீரழித்து வருவதாக கூறினார். இது குறித்து அவர் பேசுகையில், ''பாஜக அரசு அதிமுகவை திட்டமிட்டு சீரழித்து வருகிறது. கட்சியை பலவீனப்படுத்துவதற்கான வேலைகளை செய்து வருகிறது. முதலில் அதிமுகவை பலவீனப்படுத்தி சீரழித்து விட்டு பின்பு திமுகவை சீரழிக்க பாஜக நினைத்துக்கொண்டிருக்கிறது'' என்று குற்றம் சாட்டினார்.
-
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
விசிகவுக்கான 8 தொகுதிகள் முடிவாகிவிட்டது.. ஸ்டாலின் முறையாக அறிவிப்பார்.. திருமாவளவன் பேட்டி! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட்












Click it and Unblock the Notifications