ஆர்கேநகர்: தலைதெறிக்க தப்பி ஓடும் பாஜக பிரமுகர்கள்- மீண்டும் மதுசூதனன், மருது கணேஷ், தினகரன் போட்டி?
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் போட்டியிட வைத்துவிடுவார்களோ என அஞ்சி பாஜக பிரமுகர்கள் தப்பி ஓடுவதாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட விரும்பாமல் பாஜக பிரமுகர்கள் பலரும் தலைதெறிக்க தப்பி ஓடுவதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓராண்டு காலமாக ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் நடைபெறாமல் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தற்போது டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து டெல்லியில் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதியை தேர்தல் தேதி இன்று அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக மருதுகணேஷ்
திமுகவைப் பொறுத்தவரையில் மீண்டும் உள்ளூர் வேட்பாளர் மருது கணேஷ் நிறுத்தப்படலாம். அதேபோல் அதிமுக (அம்மா) கட்சி சார்பாக தினகரன் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

ஜெயக்குமார் மீது அதிருப்தி
அதிமுக(ஈபிஎஸ்-ஓபிஎஸ்) அணியில் மதுசூதனனே போட்டியிட விரும்புகிறார். ஆனால் ஜெயக்குமார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தற்போது சீனா எஞ்சின் படகுகள் விவகாரத்தில் ஜெயக்குமார் மீது தொகுதி மக்கள் கடும் அதிருப்தி இருப்பதால் மதுசூதனனுக்கே அதிக வாய்ப்புள்ளது.

போட்டியிடுவார் தீபா?
ஆர்கே நகரில் போட்டியிட்டு வெல்வேன் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார் தீபா. இவர்கள் அல்லாமல் பாஜக சார்பில் யார் போட்டியிடப் போகிறார்கள்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

மக்கள் தேடும் பாஜக வேட்பாளர்
பாஜக வேட்பாளராக கடந்த முறை கங்கை அமரன் போட்டியிட்டார். கடந்த ஓராண்டில் பாஜக, தமிழக மக்களின் பொறுமையை எல்லை கடந்து சோதித்துவிட்டது. அந்த கட்சி மீது காட்ட முடியாத கடுங்கோபத்தில் தமிழக மக்கள் உள்ளனர். இதனை புரிந்து கொண்டிருக்கும் பாஜக பிரமுகர்கள் கட்சி தலைமையின் கண்ணில்படாமலேயே தப்பி ஓடி தலைமறைவாகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது பாஜக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறதாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications